உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியை தவறவிட இருக்கும் சுப்மன் கில் – எதற்கு தெரியுமா?

Gill
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் 2023-ஆம் ஆண்டிற்கான 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட தற்போது தீவிரமாக தயாராகி வருகிறது. அந்த வகையில் இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் போட்டியாக வரும் அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கிறது.

இதன் காரணமாக ஏற்கனவே சென்னை வந்தடைந்த இந்திய அணியானது தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த போட்டிக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள வேலையில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் எந்தெந்த வீரர்கள் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்ற விளையாடுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் நிலவி வருகிறது.

இவ்வேளையில் தற்போது இந்திய அணியின் முன்னணி இளம் துவக்க வீரரான சுப்மன் கில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இந்த முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்ற ஒரு தகவல் வெளியாகி உள்ளது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அதன்படி ஏற்கனவே சென்னை வந்தடைந்த இந்திய அணியுடன் பயணித்த சுப்மன் கில் இங்கு வந்திருந்தாலும் அவர் பயிற்சியினை மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கு காரணம் யாதெனில் : அவருக்கு சென்னை வந்ததிலிருந்து டெங்கு காய்ச்சல் இருப்பதனால் அவரால் பயிற்சி போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை என்றும் இதன் காரணமாகவே அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : என்னய்யா சொல்றீங்க.. அப்டின்னா 2023 உ.கோ இந்தியாவுக்கு இல்ல நியூஸிலாந்துக்கா? முக்கிய புள்ளிவிவரம்

ஒருவேளை சுப்மன் கில்லால் இந்த முதல் போட்டியில் பங்கேற்க முடியவில்லை என்றால் அவருக்கு பதிலாக இஷான் கிஷன் அல்லது கே.எல் ராகுல் இருவரில் ஒருவர் துவக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது. இந்த 2023-ஆம் ஆண்டு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் இதுவரை 1230 ரன்களை 72 ரன்கள் சராசரியுடன் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement