வெந்த புண்ணில் வேலை பாய்ச்சாதீங்க.. இன்னைக்கு தான் இதை செய்யணுமா? பாபாரை விமர்சித்த அக்ரம்

Wasim Akram 2
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் முக்கியமான லீக் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 3வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அகமதாபாத் நகரில் அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிக்கு செய்த பாகிஸ்தான் சுமாராக விளையாடிய 42.5 ஓவரில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அந்த அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 50 ரன்கள் முகமது ரிஸ்வான் 49 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, முகமது சிராஜ், பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 192 ரன்கள் துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 86, ஸ்ரேயாஸ் ஐயர் 53* ரன்கள் எடுத்ததால் 30.3 ஓவரரிலேயே எளிதாக வெற்றி பெற்றது.

- Advertisement -

வெந்த புண்ணில்:
அதன் காரணமாக வரலாற்றில் 8வது முறையாக உலக கோப்பையில் பாகிஸ்தானின் தோற்கடித்து இந்தியா சாதனை படைத்தது. மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சாகின் அப்ரிடி 2 விக்கெட் எடுத்தும் படுதோல்வியை தவிர்க்க முடியவில்லை. முன்னதாக இப்போட்டியின் முடிவில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியிடம் தன்னுடைய மாமா பையனுக்காக கையொப்பமிட்ட ஜெர்சி ஒன்றை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அதற்கு கொஞ்சமும் தாமதிக்காத விராட் கோலி உடனடியாக கையொப்பமிட்ட ஜெர்சியை பாபர் அசாமுக்கு கொடுத்தது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. குறிப்பாக என்ன தான் பரம எதிரிகளாக இருந்தாலும் கடந்த சில வருடங்களாகவே விராட் கோலி மற்றும் பாபர் அசாம் ஆகியோர் மிகச் சிறந்த நண்பர்களாக இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்த போது இதுவும் கடந்து போகும் என்று பாபர் அசாம் ட்வீட் போட்டு விராட் கோலிக்கு கொடுத்து ஆதரவை மறக்க முடியாது.

- Advertisement -

அதனாலேயே அவர் கேட்டதும் உடனடியாக விராட் கோலியும் அன்பு பரிசை வழங்கினார். இந்நிலையில் இந்தியாவிடம் படுதோல்வியை சந்தித்த நாளில் விராட் கோலியிடம் இப்படி ஒரு பரிசை பெற்றது பாகிஸ்தான் ரசிகர்களிடம் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவத்து போல் இருப்பதாக பாபரசாமை ஜாம்பவான் வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார். இது பற்றி தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியிடம் ஜெர்சியை பாபர் அசாம் பெற்றதை நான் பார்த்தேன்”

இதையும் படிங்க: உலககோப்பை தொடரில் இருந்து திடீரென வெளியேறிய தசுன் ஷனகா. என்ன காரணம்? – புதிய கேப்டன் இவர்தான்

“அந்த வீடியோவை அனைவரும் மீண்டும் மீண்டும் காட்டுகின்றனர். ஆனால் உங்களுடைய ரசிகர்கள் இப்படி ஒரு மோசமான செயல்பாடுகளால் ஏமாற்றத்தை சந்தித்துள்ள போது இதை நீங்கள் திறந்த மைதானத்தில் அல்லாமல் மறைவாக வாங்கியிருக்க வேண்டும். அதையும் இன்று வாங்குவதற்கு சரியான நாள் கிடையாது. ஒருவேளை உங்களுடைய மாமா பையனுக்கு விராட் கோலி ஜெர்சி வேண்டுமானால் நீங்கள் அதை உடைமாற்றும் அறையில் வாங்கியிருக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement