உலககோப்பை தொடரில் இருந்து திடீரென வெளியேறிய தசுன் ஷனகா. என்ன காரணம்? – புதிய கேப்டன் இவர்தான்

Shanaka
- Advertisement -

இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கிய ஐ.சி.சி.யின் 13-ஆவது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் இந்தியாவில் உள்ள 10 வெவ்வேறு நகரங்களில் நடைபெறுகின்றன. கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் நடைபெறும் இந்த தொடரானது ரசிகர்களை தற்போது மகிழ்வித்து வருகின்றது.

இவ்வேளையில் ஒரு சில முக்கிய வீரர்கள் காயம் காரணமாக ஏற்கனவே இந்த தொடரில் விளையாட முடியாமல் போனது வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது உலக கோப்பை தொடரானது துவங்கி தற்போது ஒரு வாரத்தை கடந்து வெற்றிகரமாக நடைபெற்று வரும் வேளையில் மேலும் ஒரு சில வீரர்கள் இந்த தொடரின் போது காயம் ஏற்பட்டு வெளியேறி வருவது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறிய வேளையில் தற்போது இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா இந்த உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

இதுகுறித்த தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இந்த உலக கோப்பை தொடரின் போது தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்ட தசுன் ஷனக்காவிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவரது காயம் குணமடைய இன்னும் மூன்று வாரங்கள் என்று கூறப்பட்டது.

- Advertisement -

இதன் காரணமாக இந்த நடப்பு உலகக்கோப்பை தொடருக்கான இலங்கை அணியில் இருந்து அவர் வெளியேறியுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக தற்போதைய துணை கேப்டன் குசால் மெண்டிஸ் இலங்கை அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தான் செய்த தவறை உணர்ந்து போட்டியின் போதே திருத்திக்கொண்ட விராட் கோலி – கவனத்தை ஈர்த்த தருணம்

மேலும் தசுன் ஷனகாவிற்கு பதிலாக சமீகா கருணரத்னேவிற்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டியில் விளையாடியுள்ள இலங்கை அணி அந்த 2 போட்டியிலுமே தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement