தான் செய்த தவறை உணர்ந்து போட்டியின் போதே திருத்திக்கொண்ட விராட் கோலி – கவனத்தை ஈர்த்த தருணம்

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான போட்டி நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி உலக கோப்பை தொடரில் எட்டாவது முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தியுள்ளது.

இந்த உலககோப்பை தொடரில் இந்திய அணியானது தொடர்ச்சியாக ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் என மூன்று அணிகளையும் வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கும் சென்றுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 42.5 ஓவர்களில் 191 ரன்கள் மட்டுமே குவிக்க பின்னர் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 30.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 192 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது ஏகப்பட்ட சுவாரசியமான விடயங்கள் மைதானத்தில் அரங்கேறின. அதில் சில விடயங்கள் பெரிய அளவில் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளன.

- Advertisement -

அந்த வகையில் நேற்றைய போட்டியின் போது இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி தான் செய்த தவறு ஒன்றினை உணர்ந்து மீண்டும் அதனை திருத்திக் கொண்டதும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனத்தை ஈத்துள்ளது. அந்த வகையில் மற்ற வீரர்கள் அனைவரும் தோள்பட்டையில் மூவர்ண பட்டை பதிக்கப்பட்ட ஜெர்சியை அணிந்து விளையாடிய வேளையில் கோலி மட்டும் தவறுதலாக பயிற்சியின்போது அணியும் ஜெர்சியை அணிந்து வந்து விட்டார்.

இதையும் படிங்க : பரபரப்பான போட்டிக்கு பின்னர் பாக் கேப்டன் பாபர் அசாமிற்கு விராட் கோலி வழங்கிய – அன்புப்பரிசு

போட்டியின் இடையே இதனை கவனித்த விராட் கோலி மீண்டும் ஓய்வறையை நோக்கி தான் தவறான ஜெர்சியை அணிந்து வந்ததாகவும், மூவர்ண நிறமுடைய ஜெர்சியை கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டார். பின்னர் ஓவரின் இடையே தனது ஜெர்சியையும் விராட் கோலி மாற்றிக்கொண்டு மீண்டும் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Advertisement