பரபரப்பான போட்டிக்கு பின்னர் பாக் கேப்டன் பாபர் அசாமிற்கு விராட் கோலி வழங்கிய – அன்புப்பரிசு

Kohli
- Advertisement -

கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற பாகிஸ்தான் அணியானது அதன்பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து தற்போது பாபர் அசாம் தலைமையிலான அணியுடன் இந்தியா வந்தடைந்து ஐசிசி-யின் 13-ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டியில் இரண்டு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை பெற்று நல்ல நிலையில் உள்ளது.

அந்த வகையில் நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்று முடிந்தது.

- Advertisement -

இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்த தொடரில் மூன்று வெற்றிகளுடன் வெற்றி நடை போடுகிறது. அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 191 ரன்களை மட்டுமே குவித்தது.

பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 30.3 ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 192 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நடைபெற்ற பல்வேறு சுவாரசியமான சம்பவங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்தவகையில் இந்த போட்டி முடிந்து பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாமிற்கு விராட் கோலி வழங்கிய அன்பு பரிசு குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி நடைபெற்று முடிந்த இந்த இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு பிறகு மைதானத்தில் இருந்த பாபர் அசாமிடம் தான் இந்த போட்டியில் பயன்படுத்தி விளையாடிய ஜெர்சியில் கையொப்பம் இட்டு விராட் கோலி அந்த ஜெர்சியினை பாபர் அசாமிற்கு அன்பு பரிசாக வழங்கினார்.

இதையும் படிங்க : கெயில், பாண்டிங் சாதனையை தூளாக்கிய ஹிட்மேன் ரோஹித் சர்மா – 3 புதிய உலக சாதனை

ஏற்கனவே பாகிஸ்தான் வீரர்கள் சிலருக்கு விராட் கோலி தான் பயன்படுத்திய பேட், கையுறை, ஜெர்சி என பல்வேறு பரிசுகளை வழங்கியிருந்த வேளையில் தற்போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமிற்க்கும் அன்பு பரிசு வழங்கி அவரை கௌரவித்தது ரசிகர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement