கெயில், பாண்டிங் சாதனையை தூளாக்கிய ஹிட்மேன் ரோஹித் சர்மா – 3 புதிய உலக சாதனை

Rohit Sharma Record 2
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 3வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அகமதாபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 191 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 50 ரன்கள் முகமது ரிஸ்மான் 49 ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா, சிராஜ், பாண்டியா, ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 5 விக்கெட்கள் எடுத்தனர். அதை தொடர்ந்து 192 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே 6 பவுண்டரி 6 சிக்ஸருடன் 86 (63) ரன்கள் விளாசி வெற்றியை ஆரம்பத்திலேயே உறுதி செய்தார்.

- Advertisement -

ரோஹித்தின் சாதனை:
அவருடன் ஸ்ரேயாஸ் ஐயர் 55*, ராகுல் 19* ரன்கள் எடுத்ததால் 30.3 ஓவரிலேயே எளிதாக வென்ற இந்தியா உலகக் கோப்பையில் 8வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி தங்களுடைய வெற்றி சரித்திரத்தை தக்க வைத்துக்கொண்டது. அதன் காரணமாக பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சாகின் அப்ரிடி 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

1. முன்னதாக இந்த போட்டியில் அடித்த 6 சிக்ஸர்களையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் 300 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை ரோகித் சர்மா படைத்தார். அவரை தவிர்த்து வேறு எந்த இந்திய வீரரும் 250 சிக்சர்கள் கூட அடித்ததில்லை. சொல்லப்போனால் அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மற்றொரு ஜாம்பவான் எம்எஸ் தோனி 226 சிக்சர்கள் அடித்து 2வது இடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

2. அதை விட 246 இன்னிங்ஸ்லயே 300 சிக்ஸர்கள் அடித்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக 300 சிக்சர்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையை தகர்த்து உலக சாதனை படைத்தார். அந்த பட்டியல் (இன்னிங்ஸ்):
1. ரோகித் சர்மா : 246*
2. கிறிஸ் கெயில் : 282
3. ஷாஹித் அப்ரிடி : 324

3. அத்துடன் உலகக் கோப்பை வரலாற்றில் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற ரிக்கி பாண்டிங் சாதனையும் தகர்த்த அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல் (ரன்கள்):
1. ரோகித் சர்மா : 586*
2. ரிக்கி பாண்டிங் : 519
3. மார்ட்டின் கப்தில் : 504
4. ஆடம் கில்கிறிஸ்ட் : 498
5. ஸ்டீபன் பிளெமிங் : 468
6. விராட் கோலி : 461*

இதையும் படிங்க: பாகிஸ்தானை தோற்கடித்து பாக் உலக சாதனையை சமன் செய்த இந்தியா.. 2018 – 2023 வரலாறு காணாத சரித்திர வெற்றி

4. மேலும் உலகக் கோப்பையில் சேசிங் செய்யப்பட்ட போட்டியில் அதிக முறை 50க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஜேக் காலிஸ் (தலா 6) ஆகியோரது சாதனையை உடைத்து சாகிப் அல் ஹசன் (தலா 7) உலக சாதனையையும் ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.

Advertisement