பாகிஸ்தானை தோற்கடித்து பாக் உலக சாதனையை சமன் செய்த இந்தியா.. 2018 – 2023 வரலாறு காணாத சரித்திர வெற்றி

IND vs PAk 5
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 3வது வெற்றியை பதிவு செய்து 6 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் சுமாராக விளையாடிய 191 ரன்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 50, முகமது ரிஸ்வான் 49 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ், பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, முஹம்மது சிராஜ் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத் தொடர்ந்து 192 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடி 86 ரன்கள் குவித்து வெற்றியை எளிதாக்கினார்.

- Advertisement -

இந்தியாவின் மாஸ் வெற்றி:
அவருடன் ஸ்ரேயாஸ் ஐயர் 53* ரன்கள் எடுத்ததால் 30.3 ஓவரிலேயே எளிதாக இந்தியா வென்றது. மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக சாகின் அப்ரிடி 2 விக்கெட்கள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. முன்னதாக இந்த போட்டியில் 2017 மற்றும் 2021 ஐசிசி தொடர்களை போல முதல் முறையாக இந்தியாவை தோற்கடிப்போம் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்தார்.

அதே போல இம்முறை நிச்சயம் வரலாறு மாறும் என சோயப் அக்தர் போன்ற அந்நாட்டை சேர்ந்த முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் ஆரம்பத்திலேயே பேசினார்கள். ஆனாலும் அமைதியாக இருந்து களத்தில் கில்லியாக செயல்பட்ட இந்தியா உலகக்கோப்பையில் தொடர்ந்து 8வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்து தங்களுடைய வெற்றி சரித்திரத்தையும் கௌரவத்தையும் தக்க வைத்துள்ளது.

- Advertisement -

அத்துடன் இந்த வெற்றியின் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற பாகிஸ்தானின் உலக சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. அதாவது இந்தியாவைப் போலவே உலகக்கோப்பையில் இதுவரை இலங்கையை எதிர்கொண்ட 8 போட்டிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து சந்திக்காமல் வெற்றி கண்டுள்ளது.

அந்த வகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானை தவிர்த்து ஜிம்பாப்வேவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேசத்திற்கு எதிராக நியூசிலாந்து ஆகிய அணிகள் இதுவரை உலகக் கோப்பையில் தோற்காமல் தலா 6 வெற்றிகளை பதிவு செய்து இப்பட்டியலில் 2வது இடத்தில் இருக்கின்றன. அதை விட 2018 ஆசியக் கோப்பையில் சந்தித்த 2 போட்டிகளில் முறையே 8, 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா 2019 உலகக்கோப்பையில் 89 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இதையும் படிங்க: பாகிஸ்தானை தோற்கடித்து பாக் உலக சாதனையை சமன் செய்த இந்தியா.. 2018 – 2023 வரலாறு காணாத சரித்திர வெற்றி

அதை தொடர்ந்து கடந்த மாதம் இலங்கையில் நடைபெற்ற 2023 ஆசிய கோப்பையில் 228 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா தற்போது 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. அதாவது கடைசியாக சந்தித்த 5 போட்டிகளிலும் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்துள்ளது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டின் வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக 5 போட்டிகளில் தொடர்ந்து இந்தியா வரலாறு காணாத வெற்றியையும் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement