உண்மையிலேயே கஷ்டமா தான் இருக்கு.. ஆனாலும் இஷான் கிஷனை வெளியேற்ற இதுதான் காரணம் – ரோஹித் சர்மா பதில்

Rohit
- Advertisement -

இந்திய அணியின் இளம் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் கடந்த ஒரு ஆண்டாகவே மிகச் சிறப்பான ஆட்டத்தை மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் வெளிப்படுத்தி வருவதால் ரோஹித் சர்மாவுடன் முதன்மை துவக்க வீரராக அவரே நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துவக்க வீரராக 15 பேர் கொண்ட இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் அக்டோபர் 8-ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற இந்திய அணியின் முதல் லீக் போட்டிக்கு முன்னதாக அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியை அவர் தவற விட்டார். பின்னர் டெங்கு காய்ச்சல் குறையாத வேளையில் டெல்லி மைதானத்தில் அக்டோபர் 11-ஆம் தேதி நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியையும் அவர் தவறவிட்டார்.

- Advertisement -

இதன் காரணமாக முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணியிலும் ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக இஷான் கிஷனே களமிறங்கி விளையாடி இருந்தார். இந்நிலையில் அக்டோபர் 14-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டிக்கு டெங்கு காய்ச்சலில் இருந்து மீண்டு வந்த சுப்மன் கில் அணியில் நேரடியாக இடம் பிடித்தது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

முழு உடற்தகுதியுடன் தான் அவர் விளையாடுகிறாரா? இல்லை ஏதும் கட்டாயத்தின் பேரில் அவர் விளையாடுகிறாரா? என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இஷான் கிஷன் வெளியேற்றப்பட்டது குறித்தும், சுப்மன் கில் அணியில் இணைந்தது குறித்தும் ரோகித் சர்மா டாசின் போதே தெளிவான விளக்கம் ஒன்றினை அளித்திருந்தார்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸிற்கு பிறகு கூறுகையில் : இந்த போட்டியில் இஷான் கிஷனுக்கு பதிலாக சுப்மன் கில் விளையாடுகிறார். இதன் காரணமாக இஷான் கிஷன் அணியிலிருந்து வெளியேறுகிறார். அவர் வெளியேறுவது வருத்தமாக தான் இருக்கிறது. இருந்தாலும் அணிக்கு என்ன தேவையோ அந்த முடிவை தான் நாங்கள் எடுக்கிறோம்.

இதையும் படிங்க : ரிஸ்வான் விக்கெட்டை எடுத்தத விட அவரோட விக்கெட்டை எடுத்தது தான் என்னோட பெஸ்ட் பால் – ஆட்டநாயகன் பும்ரா

அவரும் (இஷான் கிஷன்) எப்போதெல்லாம் தனக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அணிக்காக சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளார். சுப்மன் கில் ஒரு ஸ்பெஷல் பிளேயர் கடந்த ஒரு ஆண்டாகவே அவர் ஏகப்பட்ட ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் குவித்துள்ளார். அதிலும் குறிப்பாக இந்த மைதானத்தில் அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதாலே அவரை இந்த போட்டியில் இணைத்துள்ளோம் என ரோகித் சர்மா தெளிவான விளக்கத்தை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement