ரிஸ்வான் விக்கெட்டை எடுத்தத விட அவரோட விக்கெட்டை எடுத்தது தான் என்னோட பெஸ்ட் பால் – ஆட்டநாயகன் பும்ரா

Bumrah
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 13-வது ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான அணியை வீழ்த்தி இந்த தொடரில் தொடர்ச்சியாக தங்களது மூன்றாவது வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 42.5 ஓவர்களில் 191 ரன்கள் மட்டுமே குவித்தது. ஒரு கட்டத்தில் 155 ரன்களுக்கு 3 விக்கெட் என்று நல்ல நிலையில் இருந்த பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது.

- Advertisement -

பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 30.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 192 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக 7 ஓவர்கள் வீசிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா 1 மெய்டன் உட்பட 19 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

அவரது பந்துவீச்சே இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்ததால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசியிருந்த பும்ரா கூறுகையில் : இந்த போட்டியில் நான் பந்துவீசிய விதம் உண்மையிலேயே நன்றாக இருந்ததாக நினைக்கிறேன். வழக்கமாக களத்திற்கு சென்றதும் எவ்வளவு விரைவாக மைதானத்தை கணிக்க முடியுமோ அவ்வளவு வேகமாக கணிக்க வேண்டும்.

- Advertisement -

அந்த வகையில் இந்த மைதானத்தில் பந்து ஸ்லோவாக இருந்ததால் கடினமான லென்த்தில் பந்துவீச வேண்டும் என்று முடிவு செய்தோம், மேலும் அவ்வாறு பந்து வீசினால் நிச்சயம் எதிரணி அடுத்தது அழுத்தத்தை சந்திக்கும் என்பதனால் தொடர்ச்சியாக நாங்கள் அதன்படியே பந்துவீசி இருந்தோம். நான் சற்று இளமையான வீரராக இருக்கும்போது நிறைய கேள்விகளை சீனியர்களிடம் கேட்டுக் கொண்டே இருப்பேன். அந்த வகையில் நான் கேட்ட கேள்விகள் இன்று எனக்கு பெரிய அளவில் உதவி செய்துள்ளன.

இதையும் படிங்க : உங்காளுங்களே கீழே தள்ளிட்டாங்க.. ஹாஹா எழுந்திரு ப்ரதர்.. அக்தரை ஆறுதலுடன் கலாய்த்த சேவாக்

தற்போது நான் ஒரு அனுபவம் உள்ள வீரராக மாறி உள்ளேன். இளம் வயதில் சீனியர்களிடம் கேட்ட கேள்விகள் எல்லாம் தற்போது எனக்கு பெரிய அளவில் எனது பந்துவீச்சில் மாற்றத்தை கொடுத்து வருகின்றன. மைதானத்திற்கு ஏற்றார் போல் என்னால் வெவ்வேறு முடிவுகளையும் எடுத்து சிறப்பாக பந்துவீச முடிகிறது. இந்த போட்டியில் ரிஸ்வான் விக்கெட்டை வீழ்த்தியதை காட்டிலும் ஷதாப் கான் விக்கெட்டை வீழ்த்தியதே எனது சிறப்பான பந்தாக அமைந்தது என பும்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement