உங்காளுங்களே கீழே தள்ளிட்டாங்க.. ஹாஹா எழுந்திரு ப்ரதர்.. அக்தரை ஆறுதலுடன் கலாய்த்த சேவாக்

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தங்களுடைய 3வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அகமதாபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 42.5 ஓவரில் 42.5 ஓவரில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 50 ரன்கள் முகமது ரிஸ்மான் 49 ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, சிராஜ், பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 192 ரன்கள் துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 86 (63) ரன்கள் அடித்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ரோஹித்தின் சாதனை:
அவருடன் கில் 16, விராட் கோலி 16, ஸ்ரேயாஸ் ஐயர் 53*, கே.எல். ராகுல் 19* ரன்கள் எடுத்ததால் 30.3 ஓவரிலேயே இலக்கை எளிதாக எட்டிய இந்தியா உலகக் கோப்பை வரலாற்றில் 8வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்து சாதனை படைத்தது. மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஷாகின் அப்ரிடி 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி பெற முடியவில்லை.

முன்னதாக இந்த போட்டியில் இந்தியாவை கண்டிப்பாக பாகிஸ்தான் தோற்கடித்து வரலாற்றை மாற்றும் என்று சோயப் அக்தர் கடந்த சில தினங்களாகவே பேட்டி கொடுத்து வந்தார். குறிப்பாக 1999 கொல்கத்தா டெஸ்டில் சச்சினை கோல்டன் டக் அவுட்டாக்கி பாகிஸ்தான் வென்றது போல் இம்முறையும் இந்தியாவை வீழ்த்துவோம் என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

- Advertisement -

அதன் உச்சமாக இப்போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்யாமல் அந்த வாய்ப்பை பாகிஸ்தானுக்கு கொடுத்ததால் இந்தியாவை அடித்து நொறுக்க போவதாக அவர் ட்விட்டரில் வீடியோ போட்டிருந்தார். அது போக பாகிஸ்தான் ஆரம்பத்தில் சிறப்பாக பேட்டிங் செய்ததை வைத்து மாலை 4.10 மணிக்கு ட்விட்டரில் “இந்த பவுண்டரிகளால் அமைதியாக இருப்பதை வியப்பாக உணர்கிறேன்” என்று இந்திய ரசிகர்கள் அமைதியாக இருந்ததை கிண்டலடிக்கும் வகையில் அவர் பதில் பதிவிட்டிருந்தார்.

Sehwag Tweet

ஆனால் இறுதியில் பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்ததால் வழக்கம் போல வீரேந்தர் சேவாக் தேடிச்சென்று உங்களது அணியே அழுத்தத்திற்கு முன் சிறப்பாக செயல்படாமல் உங்களை வீழ்த்தி விட்டதாக கலாய்த்துள்ளது பின்வருமாறு. “திடீரென்று வந்த அதே அமைதியால் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் முன்கூட்டியே பெவிலியனுக்கு செல்லலாம் என்று முடிவெடுத்து விட்டார்கள். அவர்களால் அழுத்தத்தை கையாள முடியவில்லை. ஹாஹா கவலைப்படாதீர்கள் சோயப் பிரதர். 8 – 0 என்ற சாதனை படைப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சியிருக்கிறது. அன்பு இல்லை” என்று கூறியுள்ளார்.

Advertisement