தொட முடியாத அளவுக்கு.. அவர் வெற்றிகரமா செயல்பட இதான் காரணம்.. டெக்னிக்கை விளக்கிய வாசிம் அக்ரம்

Wasim Akram
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 8 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. இதை அடுத்து நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் நடைபெறும் முதல் செமி ஃபைனலில் வலுவான நியூசிலாந்தை தோற்கடிக்க தயாராகி வரும் இந்தியா அதற்கு முன்பாக நெதர்லாந்தை தீபாவளி தினத்தன்று எதிர்கொள்கிறது.

இந்த வெற்றிகளில் பேட்ஸ்மேன்களுக்கு நிகராக பும்ரா, ஷமி, சிராஜ் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு முக்கிய பங்காற்றி வருகிறார்கள். குறிப்பாக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளை தங்களுடைய மிரட்டலான வேகத்தால் தெறிக்க விட்ட இவர்கள் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற உதவினார்கள்.

- Advertisement -

அக்ரம் பாராட்டு:
அதிலும் குறிப்பாக முகமது ஷமி பந்துகளை தொட முடியாத அளவுக்கு எதிரணி பேட்ஸ்மேன்கள் திண்டாடி தங்களுடைய விக்கெட்டை இழந்தனர். அந்த வகையில் முதல் 4 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருந்த ஷமி அடுத்த 4 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்களை எடுத்த இந்திய பவுலர் என்ற மாபெரும் சாதனை படைத்தார்.

இந்நிலையில் பும்ராவை விட ஷமி வெற்றிகரமாக செயல்படுவதற்கான பின்னணியை பற்றி பாகிஸ்தான் ஜாம்பவான் வீரர் வாசிம் அக்ரம் ஏ ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “பொதுவாக அறிமுகமாக வரும் பவுலர்கள் அனைவரும் நான் சிறந்த பவுலர்களில் ஒருவன் என்ற எண்ணத்துடன் விளையாட வர வேண்டும். அந்த தன்னம்பிக்கை இந்திய பவுலர்களிடம் இருக்கிறது”

- Advertisement -

“அந்த நம்பிக்கை உங்களிடம் இருந்தாலே நீங்கள் பல வருடங்களாக உழைத்த கடினமான உழைப்புக்கு பரிசு கிடைக்கும். ஷமி ஒவ்வொரு பந்திலும் சீம் பகுதிகளை தரையில் அடிக்கிறார். அதாவது அவர் வீசும் பந்துகள் நேராக சென்று பிட்ச்சில் முத்தமிட்டு அப்படியே செல்கிறது. அதே சமயம் அவர் பிட்ச்சில் பந்தை வேகமாக அடிப்பதில்லை. அதன் காரணமாகவே அவருடைய பந்ததில் என்ன செய்வது என்று தெரியாமல் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் கிளீன் போல்ட்டானார்”

இதையும் படிங்க: 1996 உலக சாம்பியன் மீது விழுந்த மற்றொரு இடி.. ஐசிசி தொடரின் வரலாற்றில் புதிய அவமானத்தை சந்தித்த இலங்கை

“ஷமியின் லென்த்தை பாருங்கள். அரௌண்ட் தி விக்கெட் திசையிலிருந்து பந்துகளை வெளியே கொண்டு வந்த அவர் கடைசி பந்தை திடீரென உள்ளே கொண்டு வந்தார். ஆனால் எப்போதும் அவருடைய லென்த் மற்றும் சீம், ஆஃப் அல்லது டாப் ஸ்டம்ப் பொசிஷன் ஆகியவை மாறவில்லை. அவர் பந்தை ஒரே இடத்தில் உள்ளேயும் வெளியேயும் இழுப்பதாலேயே எதிர்கொள்வதற்கு கடினமாக இருக்கிறார். மறுபுறம் பும்ரா தன்னுடைய மணிக்கட்டை வைத்து ஸ்விங் செய்கிறார். ஷமி சீம் பகுதியை பிடித்து 142 – 145 கி.மீ வேகத்தில் ஸ்விங் செய்கிறார்” என்று கூறினார்.

Advertisement