1996 உலக சாம்பியன் மீது விழுந்த மற்றொரு இடி.. ஐசிசி தொடரின் வரலாற்றில் புதிய அவமானத்தை சந்தித்த இலங்கை

Sri Lanka 2
- Advertisement -

இந்தியாவில் கோலாலமாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் லீக் சுற்றில் தேவையான வெற்றிகளை பெற்று புள்ளி செமி ஃபைனல் சுற்றில் மோதுவதற்கு தயாராகி உள்ளன. மறுபுறம் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை போன்ற அணிகள் சுமாராக செயல்பட்டு லீக் சுற்றுடன் வெளியேறின.

குறிப்பாக ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து போன்ற அணிகள் கூட மிகச் சிறப்பாக விளையாடிய நிலையில் 1996 உலக சாம்பியன் இலங்கை படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது. ஹஸரங்கா, சனாக்கா போன்ற முக்கிய வீரர்கள் காயத்தை சந்தித்து வெளியேறியதால் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்த இலங்கைக்கு எஞ்சிய வீரர்களும் சுமாராக செயல்பட்டனர்.

- Advertisement -

பரிதாப இலங்கை:
அதனால் ஆப்கானிஸ்தான் போன்ற அணியிடம் தோற்ற இலங்கை மும்பையில் இந்தியாவுக்கு எதிராக வெறும் 55 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது. மேலும் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் திருவனந்தபுரத்தில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்ற அந்த அணி 2023 ஆசிய கோப்பை ஃபைனலிலும் வெறும் 50 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது.

அந்த வகையில் அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்ததால் ஏமாற்றமடைந்த இலங்கை விளையாட்டு துறை தங்கள் நாட்டு வாரியத்தை கலைப்பதாக அதிரடி உத்தரவிட்டது. அப்படி இலங்கை அரசு தலையிட்டதால் சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணி விளையாடுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்படுவதாக ஐசிசி நேற்று முன்தினம் அறிவித்தது. அதனால் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ள இலங்கை முதலில் தங்களுடைய வாரியத்தில் அரசின் தலையீடுகள் இல்லாமல் சுதந்திரமாக செயல்படுவதற்கான வேலைகளை துவங்க உள்ளது.

- Advertisement -

ஏனெனில் அப்போது தான் ஐசிசி தடை விலகி மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கையால் விளையாட முடியும். இந்நிலையில் நவம்பர் 11ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த இங்கிலாந்து புள்ளி பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறி 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ஐசிசி’ன்னா பிசிசிஐ அதானே.. பாகிஸ்தான் பிரதமர் முதல் ரசிகர்கள் வரை.. சேவாக் கொடுத்த 5 மாஸ் பதிலடி

அதனால் வங்கதேசத்தை விட மோசமான ரன் ரேட்டை கொண்டுள்ளதால் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தை மட்டுமே பிடித்த இலங்கை 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு வரலாற்றிலேயே முதல் முறையாக தகுதி பெறாமல் இப்போதே வெளியேறியுள்ளது. சொல்லப்போனால் 1996இல் உலகக் கோப்பையை வென்ற பின் ஒரு ஐசிசி தொடரில் விளையாடுவதற்கு இலங்கை தகுதி பெறாமல் போனது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். அந்த வகையில் ஏற்கனவே அதள பாதாளத்தில் தவிக்கும் இலங்கை 2025 சாம்பியன்ஸ் ட்ராபிக்கு முதல் முறையாக தகுதி பெறாதது அந்நாட்டு ரசிகர்களுக்கு இடியைப் போல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement