ஐசிசி’ன்னா பிசிசிஐ அதானே.. பாகிஸ்தான் பிரதமர் முதல் ரசிகர்கள் வரை.. சேவாக் கொடுத்த 5 மாஸ் பதிலடி

Virender Sehwag 7
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதில் லீக் சுற்றில் முடிவில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்தது. அதனால் அந்த 4 அணிகளும் செமி ஃபைனல் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து போன்ற எஞ்சிய அணிகள் தேவையான வெற்றிகளை பெறாமல் வெளியேறின.

அதில் 1992 போல கோப்பையை வென்று தங்களை பல வழிகளிலும் புறக்கணிப்பும் இந்தியாவுக்கு அவர்களுடைய சொந்த மண்ணில் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கிய பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது. அதிலும் குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக வரலாற்றில் 8வது முறையாக தோற்ற அந்த அணி கத்துக்குட்டியான ஆப்கானிஸ்தானிடம் வரலாற்றில் முதல் முறையாக அவமான தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

சேவாக்கின் பதிலடி:
அதன் காரணமாக இந்தியா புதிய பந்துகளை பயன்படுத்துகிறது, டிஆர்எஸ் விதிமுறைகளை மாற்றுகிறது என்று வகைவகையாக விமர்சித்த பாகிஸ்தான் உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியதை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் 2022 டி20 உலகக் கோப்பையில் இதே இங்கிலாந்திடம் செமி ஃபைனலில் தோல்வியை சந்தித்து வெளியேறிய போது பாகிஸ்தானை சேர்ந்த பிரதமர் முதல் ரசிகர்கள் வரை மொத்தமாக சேர்ந்து இந்தியாவை கலாய்த்தனர்.

குறிப்பாக இந்தியா நிர்ணயித்த 169 ரன்களை 1 விக்கெட் கூட விடாமல் இங்கிலாந்து சேசிங் செய்ததையும் 2021 டி20 உலகக்கோப்பையில் 152/0 ரன்கள் அடித்து பாகிஸ்தான் தோற்கடித்ததையும் அந்நாட்டு பிரதமர் செபாஸ் ஷரீஃப் “ஞாயிற்றுக்கிழமை 152/0 – 170/0 மோதுகிறது” என்று கலாய்த்து ட்விட்டரில் பதிவிட்டார். இது போன்ற அனைத்து கிண்டல்களுக்கும் தற்போது தம்முடைய ட்விட்டரில் புகைப்படத்துடன் வீரேந்திர சேவாக் பதிலடி கொடுத்துள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“21ஆம் நூற்றாண்டில் 6 ஒருநாள் உலகக் கோப்பைகள் நடைபெற்றுள்ளன. அதில் 2007 தவிர்த்து எஞ்சிய 5 தொடர்களில் நாங்கள் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றோம். மறுபுறம் பாகிஸ்தான் அந்த 6 தொடர்களில் 2011இல் மட்டுமே தகுதி பெற்றது. ஆனால் இதையெல்லாம் அறியாமல் அவர்கள் (பாகிஸ்தான்) ஐசிசி என்றால் பிசிசிஐ, பந்துகளையும் பிட்ச்சுகளையும் மாற்றுகிறார்கள் என்று சாக்கு சொல்ல வருவார்கள். அவர்களின் பிரதமர் நாங்கள் மற்ற அணியிடம் தோற்றால் கிண்டலடிப்பார்”

இதையும் படிங்க: ஐசிசி’ன்னா பிசிசிஐ அதானே.. பாகிஸ்தான் பிரதமர் முதல் ரசிகர்கள் வரை.. சேவாக் கொடுத்த 5 மாஸ் பதிலடி

“பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா வந்து ஹைதராபாத்தில் டீ குடிப்பது போல் எங்களுடைய ராணுவ வீரரை கிண்டலடித்தனர். பாகிஸ்தான் வாரிய தலைவர் இந்தியாவை எதிரி நாடு என்று விமர்சித்தார். இவற்றை செய்தும் அவர்கள் அன்பை எதிர்பார்க்கின்றனர். எங்களிடம் யாரெல்லாம் நன்றாக நடந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு நல்லதை செய்வோம். ஆனால் இது போல் யாரெல்லாம் நடந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு நான் இதை விட ஆர்வமாக பதிலடி கொடுப்பேன். களத்திலும் களத்திற்கு வெளியேயும்” என்று கூறியுள்ளார்.

Advertisement