ஆசிய கோப்பை 2023 : போன டைம் என்ன நடந்துச்சுன்னு மறந்துடாதீங்க – இந்தியாவை ஓப்பனாக எச்சரித்த வாசிம் அக்ரம்

- Advertisement -

இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெறும் 2023 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் தயாராகும் வகையில் 2023 ஆசிய கோப்பை தொடர் மரம் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்குகிறது. ஆசிய கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை வங்கதேசம் ஆப்கானிஸ்தான் நேபாள் உள்ளிட்ட ஆசிய அணிகள் உலக கோப்பையில் விளையாடப் போகும் தங்களுடைய இறுதிக்கட்ட வீரர்களை தேர்வு செய்ய உள்ளன. அந்த வகையில் இந்த தொடரில் காயத்திலிருந்து குணமடைந்த கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அதை தொடர்ந்து ஏற்கனவே 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஆசிய அணியாக ஜொலிக்கும் இந்தியா இம்முறை 8வது கோபையை வென்று தன்னுடைய ஆதிக்கத்தை அதிகரிக்கும் முனைப்புடன் களமிறங்குகிறது. இருப்பினும் தற்சமயத்தில் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் பரம எதிரி பாகிஸ்தான், நடப்பு சாம்பியனாக இருக்கும் இலங்கை போன்ற அணிகள் இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

எச்சரித்த அக்ரம்:
முன்னதாக கடைசியாக கடந்த 2018ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற 50 ஓவர் ஆசிய கோப்பை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா கடந்த வருடம் மீண்டும் துபாயில் 2022 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற 20 ஓவர் ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கியது. இப்போது போலவே அப்போதும் பாகிஸ்தானை தவிர்த்து எஞ்சிய அணிகள் பலவீனமாக இருந்ததால் இந்தியா எளிதாக கோப்பையை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் லீக் சுற்றில் வீழ்த்திய பாகிஸ்தானிடம் சூப்பர் 4 சுற்றில் வீழ்ந்த இந்தியா இலங்கையிடம் தோற்று ஃபைனலுக்கு கூட செல்லாமல் பரிதாபமாக வெளியேறியது. இந்நிலையில் கடந்த முறை பாகிஸ்தானுடன் ஃபைனலில் இந்தியா மோதும் என்று தாம் கணித்த போதிலும் கடைசியில் ஃபைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியதாக வாசிம் அக்ரம் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். மறுபுறம் இளம் வீரர்களுடன் சொல்லி அடித்த இலங்கை கோப்பையை தட்டி சென்றதால் இம்முறை இந்தியா உட்பட எந்த அணியும் உறுதியாக வெல்லும் என்று ஆரம்பத்திலேயே சொல்லப்போவதில்லை எனக் கூறியுள்ளார்.

- Advertisement -

எனவே இலங்கை, வங்கதேசம் போன்ற அணிகளிடமும் இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “கடந்த முறை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஃபைனலில் மோதும் என்று நாம் கணித்தோம். ஆனால் கடைசியில் இலங்கை கோப்பையை தட்டி சென்றது. எனவே அனைத்து 3 அணிகளுமே ஆபத்தானவை என்பதால் தங்களுடைய நாளில் யார் வேண்டுமானாலும் வெல்லலாம். ஏனெனில் மற்ற அணிகளும் இங்கே போட்டிக்காக வருகின்றன”

இதையும் படிங்க:எத்தனை இளம் வீரர்கள் வந்தாலும் அழுத்தமான மேட்ச்ல அடிக்க அவர் தான் கில்லி – சீனியரை பாரட்டிய சஞ்சய் மஞ்ரேக்கர்

“கடந்த முறை இலங்கை கோப்பையை வென்ற நிலையில் இந்தியா ஃபைனலுக்கு கூட தகுதி பெறாமல் போனது. மேலும் அரசியல் மற்றும் விளையாட்டை நான் எப்போதுமே கலப்பதில்லை. இந்தியர் மற்றும் பாகிஸ்தானியர்கள் தங்களை எப்போதுமே மதிக்கிறார்கள். எனவே அந்த மரியாதை எப்போதும் தொடரும் என்று நம்புகிறேன்” என கூறினார். இதை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி முதல் ஆசிய கோப்பை போட்டியில் குறிப்பிடத்தக்கது.

Advertisement