எத்தனை இளம் வீரர்கள் வந்தாலும் அழுத்தமான மேட்ச்ல அடிக்க அவர் தான் கில்லி – சீனியரை பாரட்டிய சஞ்சய் மஞ்ரேக்கர்

Sanjay Manjrekar
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவின் அகமதாபாத் நகரில் துவங்கி பல்வேறு நகரங்களில் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வரலாற்றில் முழுவதுமாக சொந்த மண்ணில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையை 2011 போல வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்தும் லட்சியத்துடன் ரோகித் சர்மா தலைமையான இந்தியா தயாராகி வருகிறது. மேலும் இந்த தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஜஸ்பிரித் பும்ரா போன்ற நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் காயத்திலிருந்து குணமடைந்துள்ளது இந்தியாவுக்கு பலமாக பார்க்கப்படுகிறது.

அதை விட இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்த கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து நல்ல ஃபார்மில் இருப்பது ரசிகர்களுக்கு தெம்பை கொடுக்கிறது. முன்னதாக 2008இல் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு அசத்திய அவர் ஜாம்பவான் சச்சினுக்கு பின் ரன் மெஷினாக உலகின் அனைத்து இடங்களிலும் அனைத்து டாப் பவுலர்களையும் திறம்பட எதிர்கொண்டு இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

- Advertisement -

மஞ்ரேக்கர் கோரிக்கை:
அத்துடன் சச்சினையே மிஞ்சி ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 10000 ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனை படைத்துள்ள அவர் அதற்குள் 46 சதங்கள் அடித்து நவீன கிரிக்கெட்டின் நாயகனாக ஜொலித்து வருகிறார். இந்நிலையில் இதற்கு முன் ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக செயல்பட்டதை போல இந்த உலகக் கோப்பையில் விராட் கோலி அபாரமாக செயல்பட்டு இந்தியாவுக்கு வென்று கொடுப்பார் என்ற பெரிய எதிர்பார்ப்பை வைத்திருப்பதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக 2022 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி போல இளம் வீரர்களை காட்டிலும் கில்லியாக நின்று சொல்லி அடிக்கும் திறமை விராட் கோலியிடம் இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “மகத்தான வீரர்கள் எப்போதுமே மகத்தான பயணத்தை கொண்டிருப்பார்கள். அதே சமயம் மக்கள் மாறுவது போல வீரர்களும் அவர்களுடைய திறமைகளும் மாறிக் கொண்டே தான் இருக்கும்”

- Advertisement -

“அந்த வகையில் இந்த சமயத்தில் நீங்கள் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்தளவுக்கு தம்முடைய திறமையில் முன்னேறி தாக்கத்தை ஏற்படுத்துகிறார் என்பதை பார்க்கிறீர்கள். அதே போல விராட் கோலி இந்த உலக கோப்பையில் சிறப்பாக செயல்படுவாரா என்று நான் எதிர்பார்க்கிறேன். தற்சமயத்தில் 50 ஓவர் போட்டிகள் அவருக்கு மிகவும் பிடித்த சரியான ஒரு வடிவம் என்று நீங்கள் நினைக்கலாம். அவரும் கடந்த காலங்களில் பெரிய போட்டிகளில் இந்தியாவுக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார்”

இதையும் படிங்க:ஆசியக்கோப்பை தொடரில் பந்துவீச்சாளர்களை சிக்ஸர்கள் மூலம் பதம் பார்க்க காத்திருக்கும் – 3 சிக்ஸ் ஹிட்டர்ஸ்

“மேலும் நீங்கள் இளம் மற்றும் வளரும் வீரர்கள் மீது நிறைய எதிர்பார்ப்பை வைத்திருக்கலாம். ஆனால் மிகப் பெரிய போட்டிகளில் உங்களுக்கு வெற்றி பெற்று கொடுப்பதற்கு அங்கே நின்று சிறப்பாக செயல்படும் ஒரு வீரர் தேவை. அந்த வகையில் தான் விராட் கோலி இந்தியாவுக்கு மிகவும் மதிப்பு மிக்கவராக இருக்கிறார்” என்று கூறினார்.

Advertisement