ஆசியக்கோப்பை தொடரில் பந்துவீச்சாளர்களை சிக்ஸர்கள் மூலம் பதம் பார்க்க காத்திருக்கும் – 3 சிக்ஸ் ஹிட்டர்ஸ்

Rohit-Shanaka-Iftikhar
- Advertisement -

எதிர்வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. உலக கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற இருக்கும் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இவ்வேளையில் இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றன.

பொதுவாக கிரிக்கெட் போட்டிகளை மைதானத்தில் ரசிகர்கள் கண்டுகளிக்க வருவதற்கு காரணமே வீரர்கள் அடிக்கும் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை காணத்தான். அந்த வகையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் பந்துவீச்சாளர்களை தங்களது சிக்ஸர் மூலம் வெளுத்து வாங்க காத்திருக்கும் மூன்று முக்கிய வீரர்கள் குறித்த பட்டியலை இந்த பதிவில் காணலாம்.

- Advertisement -

1) ரோஹித் சர்மா : இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மாவின் சிக்சர் அடிக்கும் எபிலிட்டி குறித்து நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. சர்வதேச கிரிக்கெட்டில் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் சிக்ஸர்களை மைதானம் முழுதும் பறக்க விட்டுள்ள ரோகித் சர்மா நிச்சயம் இந்த ஆசிய கோப்பை தொடரிலும் அதிக சிக்ஸர்களை விளாச வாய்ப்பு உள்ளது. ஏனெனில் துவக்கத்திலிருந்து அதிரடியை கையாளும் ரோகித் சர்மா ஃபுல் ஷாட் மூலம் ஏகப்பட்ட சிக்ஸர்களை விளாச கூடியவர்.

அதோடு சரியான டைமிங் மற்றும் பவர் வைத்திருக்கும் ரோகித் சர்மா நிலைத்து நின்று விளையாட ஆரம்பித்து விட்டால் பவுலர்கள் அவரை கட்டுப்படுத்துவது என்பது கடினமான காரியம் தான்.

- Advertisement -

2) இப்திகார் அகமது : பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரனாக இவர் சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் அவருடைய பேட்டிங் எபிலிட்டி டொமஸ்டிக் தொடர்களிலும், டி20 லீக் போட்டிகளிலும் நாம் பார்த்திருக்க முடியும். பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் மிகவும் பவர் கொண்ட அவர் பெரிய பெரிய சிக்சர்களை அடிக்கக்கூடிய ஒரு பேட்ஸ்மேன். மிடில் ஆர்டரில் களமிறங்கும் அவர் ஒரு சில பந்துகளை எடுத்துக் கொண்டு செட்டிலாகி விட்டால் சிக்ஸர்கள் பறப்பது உறுதி.

இதையும் படிங்க : அன்னைக்கு யுவி அந்த வார்த்தை பேசலன்னா, இன்று 2023 உ.கோ கேப்டனா வந்திருக்க மாட்டேன் – 2011 பின்னணி பற்றி ரோஹித் உருக்கம்

3) தசுன் ஷனகா : இலங்கை அணியின் கேப்டனான இவர் பெரிய பெரிய சிக்ஸர்களை அடிப்பதற்கே பெயர் போனவர். அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நம்ப முடியாத சேசிங்கை நிகழ்த்தியும் காட்டி இருந்தார். அதோடு இந்திய அணிக்கு எதிராகவும் தனது அட்டகாசமான ஆட்டத்தை கடந்த ஆண்டு வெளிப்படுத்தியிருந்தார். பின் வரிசையில் களமிறங்கக்கூடிய இவர் அதிரடியாக சிக்ஸர்களை விளாசக் கூடியவர் என்பதனால் இந்த ஆசிய கோப்பை தொடரில் அவரும் பல சிக்ஸர்களை அடிக்க வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement