அன்னைக்கு யுவி அந்த வார்த்தை பேசலன்னா, இன்று 2023 உ.கோ கேப்டனா வந்திருக்க மாட்டேன் – 2011 பின்னணி பற்றி ரோஹித் உருக்கம்

Rohit Sharma Yuvraj Singh
- Advertisement -

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்கி நவம்பர் 19 வரை நடைபெறுகிறது. உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் இந்த தொடர் வரலாற்றில் முதல் முறையாக இந்திய மண்ணில் நடைபெறுவது ஸ்பெஷலாகும். அதில் எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் வலுவான கிரிக்கெட் அணியாக திகழும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர்ச்சியான தலை குனியும் தோல்விகளை நிறுத்தும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.

முன்னதாக 28 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சரித்திரம் படைத்த 2011 உலக கோப்பையில் பெரும்பாலும் கங்குலி உருவாக்கிய சீனியர் வீரர்களை தேர்வு செய்த கேப்டன் எம்எஸ் தோனி வீரர்களில் விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை மட்டுமே தேர்ந்தெடுத்தார். குறிப்பாக எக்ஸ்ட்ரா ஸ்பின்னர் வேண்டும் என்பதற்காக பியூஸ் சாவ்லாவை தேர்வு செய்த அவர் ரோகித் சர்மாவை கழற்றி விட்டதாக முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் ராஜா வெங்கட் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

யுவியின் உத்வேகம்:
இருப்பினும் உண்மையாகவே ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் நிறைய போட்டிகளில் வாய்ப்பு பெற்ற சுமாராக செயல்பட்ட காரணத்தாலேயே தோனி அவரை தேர்ந்தெடுக்கவில்லை. ஆனால் அதன் பின் சேவாக் போன்ற சீனியரை கழற்றி விட்டு தொடக்க வீரராக தோனி களமிறங்கும் வாய்ப்பை இறுக்கமாக பிடித்துக் கொண்ட ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்களை அடித்து மிகச் சிறந்த மேட்ச் வின்னராக உருவெடுத்து நிரந்தர தொடக்க வீரராக விளையாடி வருகிறார்.

அதற்கிடையே ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்ற காரணத்தால் தற்போது முழு நேர கேப்டனாக செயல்படும் அவர் 2023 உலகக் கோப்பையில் இந்தியாவை வழி நடத்தும் மாபெரும் கௌரவத்தையும் பெற்றுள்ளார். இந்நிலையில் 2011 உலகக் கோப்பையில் தேர்வு செய்யாததால் மனமுடைந்த தமக்கு யுவராஜ் சிங் தான் ஆதரவான வார்த்தைகளை கொடுத்து மீண்டும் சிறப்பாக செயல்பட்டு இன்று கேப்டனாக முன்னேறும் அளவுக்கு உத்வேகத்தை கொடுத்ததாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

“2011 உலகக்கோப்பை வாய்ப்பு கிடைக்காததால் ஒரு சமயத்தில் நான் சோகமாக அறையில் உட்கார்ந்திருந்தேன். அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் நான் இருந்தேன். அப்போது என்னை நம்முடைய அறைக்கு அழைத்த யுவராஜ் சிங் இரவு விருந்துக்கு கூப்பிட்டார். அங்கே நான் தேர்வு செய்யப்படாததால் அவர் என்ன உணர்ந்தார் என்பதை என்னிடம் விவரித்தார். குறிப்பாக உங்களுக்கு அடுத்ததாக இன்னும் பல சிறப்பான வருடங்கள் இருக்கின்றன”

இதையும் படிங்க: வீடியோ : 6, 6, 6, 6.. 19 வயது பச்சிளம் ஸ்பின்னரை பாவம் பாராமல் – முரட்டுத்தனமாக 4 100மீ சிக்சர்களாக அடித்து நொறுக்கிய பொல்லார்ட்

” நாங்கள் உலகக்கோப்பையில் விளையாடுவது நீங்கள் உங்களுடைய திறமை ஆட்டம் ஆகியவற்றில் கடினமாக உழைத்து முன்னேறும் வாய்ப்பை பெற்றுள்ளீர்கள். இப்போதைக்கு இந்தியாவுக்காக நீங்கள் உலகக் கோப்பையில் விளையாட போவதில்லை. எனவே முன்னேறும் வேலையை பாருங்கள் என்று சொல்லி உத்வேகத்தை கொடுத்தார். அதன் காரணமாக மீண்டும் உழைக்க துவங்கிய எனக்கு உலகக்கோப்பை முடிந்த பின் உடனடியாக வாய்ப்பு கிடைத்தது. எனவே உலகக்கோப்பையில் வாய்ப்பு பெறாத வீரர்கள் என்ன உணர்வார்கள் என்பதை நான் அறிவேன்” என்று கூறினார்.

Advertisement