இதெல்லாம் ஈஸி கிடையாது.. தன்னுடைய உலக சாதனையை சமன் செய்த ஜெய்ஸ்வாலை பாராட்டிய.. வாசிம் அக்ரம்

Wasim Akram
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 22 வயதாகும் இளம் வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் அட்டகாசமாக விளையாடி வருகிறார். இதுவரை நடந்த 3 போட்டிகளில் 545* ரன்கள் குவித்துள்ள அவர் கேப்டன் ரோஹித் சர்மா போன்ற அனுபவம் மிகுந்தவர்களை காட்டிலும் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

குறிப்பாக விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் 35 ரன்கள் கூட அடிக்காத போது தனி ஒருவனாக இந்தியாவை தாங்கிப்பிடித்த அவர் 209 ரன்கள் குவித்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அதே போல ராஜ்கோட் நகரில் நடந்த மூன்றாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 214* ரன்கள் விளாசி வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்ட அவர் இங்கிலாந்துக்கு எதிராக 2 இரட்டை சதங்கள் அடித்த முதல் இந்திய வீரராக சாதனை படைத்தார்.

- Advertisement -

ஈஸி கிடையாது:
அதை விட அப்போட்டியில் இங்கிலாந்தின் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக ஒரே ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை பறக்க விட்ட ஜெய்ஸ்வால் மொத்தம் 12 சிக்சர்கள் அடித்தார். இதன் வாயிலாக 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரமின் 28 வருட உலக சாதனையையும் அவர் சமன் செய்தார்.

இதற்கு முன் கடந்த 1996ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானின் வாசிம் அக்ரமும் 257* (363) ரன்கள் குவித்த போது 12 சிக்சர்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் மெதுவாக விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டில் இது போல சிக்ஸர்கள் மழையை பொழிவது எளிது கிடையாது என ஜெய்ஸ்வாலுக்கு ஜாம்பவான் வாசிம் அக்ரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக பாகிஸ்தான் 170/6 என தடுமாறிய போது தாம் 12 சிக்சர்கள் அடித்தது பற்றி நினைவுக் கூர்ந்த அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த என்னுடைய உலக சாதனை இன்னும் உடைக்கப்படவில்லை. அதை ஜெய்ஸ்வால் சமன் செய்து அசத்தியுள்ளார். நான் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சிக்ஸர்கள் அடித்ததாக ரசிகர்கள் பேசுகிறார்கள்”

இதையும் படிங்க: 64 பந்தில் 110 ரன்ஸ்.. ருதுராஜ், யுவி, ரவி சாஸ்திரியின் சரவெடி சாதனையை சமன் செய்த ஆந்திர வீரர்

“ஆனால் அது எளிதல்ல. ஏனெனில் நாங்கள் 170/6 என தடுமாறிய போது நான் பேட்டிங் செய்ய சென்றது இன்னும் எனக்கு நினைவு இருக்கிறது” எனக் கூறினார். இதை தொடர்ந்து 2 – 1* (5) என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கும் நான்காவது போட்டி வரும் பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement