64 பந்தில் 110 ரன்ஸ்.. ருதுராஜ், யுவி, ரவி சாஸ்திரியின் சரவெடி சாதனையை சமன் செய்த ஆந்திர வீரர்

Vamshi Krishna
- Advertisement -

இந்தியாவில் 23 வயதுக்குட்பட்டவர்களுக்கான சிகே நாயுடு 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ரயில்வேஸ் அணிகள் மோதிய போட்டி கடப்பாவில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் ரயில்வேஸ் அணியின் சுழல் பந்து வீச்சாளர் தமன்தீப் சிங் வீசிய ஒரு ஓவரில் ஆந்திர பிரதேசம் அணியின் துவக்க வீரர் வம்சி கிருஷ்ணா அதிரடியாக விளையாட தொடங்கினார்.

அதில் முதல் பந்தை கெள கார்னர் பகுதியில் அதிரடியான சிக்சராக பறக்க விட்ட அவர் இரண்டாவது பந்திலும் பவுலரின் தலைக்கு நேராக சிக்சர் அடித்தார். அதைத்தொடர்ந்து மூன்றாவது பந்தில் லாங் ஆன் திசையில் அதிரடியான சிக்சரை பறக்க விட்டு அரை சதத்தை தொட்ட அவர் நான்காவது பந்தில் ஸ்வீப் ஷாட் வாயிலாக மீண்டும் சிக்ஸர் அடித்தார்.

- Advertisement -

வரலாற்று சாதனை:
அப்போதும் நிற்காத அவர் தமன்தீப் சிங்கிற்கு கருணை காட்டாமல் 5வது பந்தில் கெள கார்னர் பகுதியில் மீண்டும் சிக்ஸரை அடித்து கடைசி பந்தில் டீப் பென்ஸ் பகுதியில் சிக்ஸர் பறக்க விட்டார். அந்த வகையில் ஒரே ஓவரின் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்த வம்சி கிருஷ்ணா முதல் தர கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த இந்திய வீரர் என்ற ரவி சாஸ்திரி, யுவராஜ் சிங், ருதுராஜ் கைக்வாட் ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

இதற்கு முன் கடந்த 1985/86 ரஞ்சிக் கோப்பையில் பரோடா அணிக்கு எதிராக மும்பை அணிக்காக ரவி சாஸ்திரி ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரராக மாபெரும் வரலாறு படைத்தார். அதைத்தொடர்ந்து 2007 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக ஸ்டுவர்ட் பிராட் வீசிய ஓவரில் யுவராஜ் சிங் 6 சிக்ஸர்களை தெறிக்க விட்டு உலக சாதனை படைத்ததை மறக்க முடியாது.

- Advertisement -

அதன் பின் கடந்த 2022 விஜய் ஹசாரே கோப்பையில் மகாராஷ்டிரா அணிக்காக உத்தரப்பிரதேச அணிக்கு எதிராக ருதுராஜ் கைக்வாட் நோ பால் உட்பட ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் அடித்தார். சொல்லப்போனால் அதன் வாயிலாக உலகிலேயே ஒரு ஓவரில் 7 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையும் ருதுராஜ் படைத்தார். அவர்களது வரிசையில் தற்போது வம்சி கிருஷ்ணாவும் இந்த மகத்தான சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.

இதையும் படிங்க: ஜெய்ஸ்வாலை விட.. இங்கிலாந்து தொடரில் விராட் கோலி இல்லாத குறையை தீர்த்தது அவர் தான்.. சுப்மன் கில் பேட்டி

அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிசிசிஐ அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும் மொத்தமாக 64 பந்துகளில் 110 ரன்கள் விளாசிய அவருடைய அதிரடியால் ஆந்திர பிரதேசம் 865/9 ரன்கள் குவித்து அசத்தியது. ஆனால் ரயில்வே அணி முதல் இன்னிங்ஸில் சுமாராக பேட்டிங் செய்து 378 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Advertisement