ஜெய்ஸ்வாலை விட.. இங்கிலாந்து தொடரில் விராட் கோலி இல்லாத குறையை தீர்த்தது அவர் தான்.. சுப்மன் கில் பேட்டி

Shubman Gill 2
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இதுவரை நடந்த 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* (5) என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. முன்னதாக இந்த தொடரில் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக விளையாடாமல் வெளியேறியது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது என்றே சொல்லலாம்.

இருப்பினும் அந்த குறையை போக்கும் அளவுக்கு 22 வயதாகும் ஜெய்ஸ்வால் இதுவரை நடந்த 3 போட்டிகளில் 545* ரன்கள் குவித்து பேட்டிங் துறையை தாங்கிப் பிடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக இரண்டாவது போட்டியில் 209 ரன்கள் அடித்த அவர் 3வது போட்டியில் 214* ரன்கள் அடித்து இங்கிலாந்துக்கு எதிராக 2 இரட்டை சதங்கள் அடித்த முதல் இந்திய வீரராக சாதனை படைத்தார்.

- Advertisement -

கோலி இல்லாத குறை:
இந்நிலையில் விராட் கோலி, கேஎல் ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத குறையை இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு தீர்த்து வருவதாக சுப்மன் கில் கூறியுள்ளார். குறிப்பாக விராட் கோலியை போலவே பவுலிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் ஜஸ்பிரித் பும்ரா முக்கிய நேரத்தில் விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்ததாகவும் கில் பாராட்டியுள்ளார்.

ஆனால் அவரும் நான்காவது போட்டியில் ஓய்வெடுக்க உள்ளது இந்திய அணிக்கு மற்றொரு பின்னடைவாக இருக்கும் என்று தெரிவிக்கும் கில் இது பற்றி போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது பின்வருமாறு. “இந்தியாவில் நாங்கள் விளையாடும் போதெல்லாம் கண்டிப்பாக ஸ்பின்னர்களுக்கு ஆதரவு இருக்கும். எனவே கடந்த போட்டியை போல 4வது போட்டியிலும் எங்களுடைய திட்டம் ஒரே மாதிரியாக இருக்கும்”

- Advertisement -

“இங்கே அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் எப்போதுமே விக்கெட்டுகளை எடுக்கக் கூடியவர்கள். ஆனால் இந்த தொடரில் எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் தான் வெற்றியில் வித்தியாசத்தை ஏற்படுத்துபவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக விராட் கோலியை போலவே பும்ரா எங்களுடைய பவுலிங் கூட்டணியின் லீடராக இருக்கிறார்”

இதையும் படிங்க: தோனியை மொத்த இந்தியாவும் மிஸ் பண்ணுது.. என் மேல எனக்கே ஏமாற்றமா இருக்கு.. சுப்மன் கில் பேட்டி

“அவரை நான்காவது போட்டியில் மிஸ் செய்வோம். இருப்பினும் ராஜ்கோட் போட்டியில் முக்கிய நேரத்தில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அந்த வகையில் எங்களுடைய அனைத்து பவுலர்களும் இந்திய சூழ்நிலைகளில் அசத்தும் அனுபவத்தை கொண்டுள்ளனர். விராட் பாய் இல்லாதது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தப் போவதில்லை. ஏனெனில் சர்பராஸ் கான் வந்து முன்னோக்கி செயல்பட துவங்கியுள்ளார். எனவே சீனியர்கள் இல்லாதது மற்ற வீரர்களுக்கு வாய்ப்பை கொடுக்கிறது” என்று கூறினார்.

Advertisement