இதனால தான் இவர் லெஜெண்ட் : விராட் – பாபர், அப்ரிடி – பும்ரா ஆகியோரில் சிறந்த வீரர்களை தேர்வு செய்த வாசிம் அக்ரம்

Wasim Akram 2
- Advertisement -

கோலாகலமான துவக்கத்தை பெற்றுள்ள 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 2ஆம் தேதி ஆசிய கண்டத்தின் டாப் 2 அணிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதவிருப்பது அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக விராட் கோலி, பாபர் அசாம் ஆகிய மகத்தான பேட்ஸ்மேன்களும் ஜஸ்பிரித் பும்ரா, ஷாஹீன் அப்ரிடி போன்ற தரமான பவுலர்களும் எதிரெதிர் அணிகளிலிருந்து தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி தேசத்தின் வெற்றிக்காக போராடுவதை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

முன்னதாக மேற்குறிப்பிட்ட 4 வீரர்களில் இவர் தான் அவர் தான் பெரியவர் என நிறைய முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் அடிக்கடி ஒப்பிட்டு பேசுவது வழக்கமாகும். அதில் விராட் கோலியை விட தங்களுடைய கேப்டன் பாபர் அசாம் தான் உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்று சர்வ சாதாரணமாக கூறும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் பும்ராவை விட ஷாஹின் அப்ரிடி தான் உலகின் நம்பர் ஒன் பவுலர் என தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

நேர்மையான கருத்து:
இந்நிலையில் தங்களுடைய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை தாண்டி திறமை மற்றும் இதுவரை நாட்டுக்காக பெற்றுக் கொடுத்த வெற்றிகளின் அடிப்படையில் பாபர் அசாமை விட விராட் கோலி தான் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். அதே சமயம் இடது கை பவுலராக இருக்கும் ஷாஹின் அப்ரிடி இந்தியாவின் பும்ராவை விட முக்கியமான தொடர்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு சிறந்த வீரராக செயல்படுவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பாஃக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

“இதை தேர்வு செய்வது மிகவும் கடினமான வேலையாகும். அதனால் தான் நான் தேர்வுக்குழு வேலைக்கு செல்லவில்லை. இருப்பினும் நிச்சயமாக பாபர் அசாமை விட விராட் கோலி சிறந்த வீரராக நான் தேர்ந்தெடுப்பேன். பாபர் மகத்தானவராக உருவாவதற்கான தம்முடைய வழியில் இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. அவர் நவீன கிரிக்கெட்டில் சிறந்த வீரராக உருவெடுத்து வருகிறார். ஆனால் அதற்கு இன்னும் காலம் தேவைப்படும்”

- Advertisement -

“குறிப்பாக விராட் கோலியை போல் அவரால் வரமுடியும் என்றாலும் அதற்கு இன்னும் நேரம் தேவைப்படுகிறது. அதே போல ஜஸ்பிரித் பும்ராவை விட ஷாஹீன் அப்ரிடியை சிறந்த பவுலராக நான் தேர்ந்தெடுப்பேன். ஏனெனில் இடது கை பவுலராக இருக்கும் அவர் மிட்சேல் ஸ்டார்க் போல பிட்ச்சில் ஃபுல்லாக வீசி ஆரம்பத்திலேயே விக்கெட்களை எடுப்பதற்கு முயற்சிப்பார். அது தான் அவரிடம் எனக்கு பிடித்ததாகும். தற்போது காயங்களை கடந்து வந்துள்ள அவருக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது”

இதையும் படிங்க: விராட் கோலிய விடுங்க, அவர சீக்கிரம் அவுட்டாக்குலனா நம்மள செஞ்சுடுவாரு – பாக் அணியை எச்சரித்த வகாப் ரியாஸ்

“மேலும் 9, 10வது இடத்தில் களமிறங்கி சில சிக்ஸர்களை அதிரடியாக பறக்க விடும் அளவுக்கு தம்முடைய பேட்டிங்கிலும் அவர் முன்னேறியுள்ளார். அத்துடன் விக்கெட்களை தேவையான சமயத்தில் எடுத்துக் கொடுப்பவராக இருப்பதாலேயே இந்த அணியின் முக்கிய வீரராக அவரை நான் பார்க்கிறேன்” என்று ஒருதலைபட்சமாக பேசாமல் ஜாம்பவானுக்கு அடையாளமாக கூறினார்.

Advertisement