விராட் கோலிய விடுங்க, அவர சீக்கிரம் அவுட்டாக்குலனா நம்மள செஞ்சுடுவாரு – பாக் அணியை எச்சரித்த வகாப் ரியாஸ்

Wahab Riaz
- Advertisement -

இலங்கையின் கண்டி நகரில் இருக்கும் பல்லக்கேல் கிரிக்கெட் மைதானத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறும் 2023 ஆசிய கோப்பையின் முக்கியமான லீக் போட்டியில் ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதுவது அனைவரிடமும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இவ்விரு அணிகளை பொறுத்த வரை பாகிஸ்தான் காயங்களை சந்திக்காத வீரர்களை கொண்டிருப்பதால் மிகவும் ஃபிட்டான அணியாகவும் பந்து வீச்சு துறையில் பலமான அணியாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ஷாஹின் அப்ரிடி, ஹரிஷ் ரவூப், நாசீம் ஷா போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்து பாகிஸ்தானை வெற்றி பெற வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே பவுலர்களை 2022 டி20 உலகக்கோப்பையில் மிகச் சிறப்பாக எதிர்கொண்டு வரலாற்றின் மகத்தான இன்னிங்ஸ் விளையாடி பாகிஸ்தானை தோற்கடித்தது போல் இம்முறையும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இந்தியாவை காப்பாற்றுவார் என்று இந்திய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் நம்புகின்றனர்.

- Advertisement -

சீக்கிரம் அவுட்டாக்குங்க:
இருப்பினும் கேஎல் ராகுல் காயத்தால் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளதும் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து குணமடைந்து எவ்விதமான முதன்மை போட்டிகளிலும் விளையாடாமல் நேரடியாக இப்போட்டியில் விளையாட உள்ளதும் இந்திய அணியின் மிடில் ஆர்டரை பலவீனமாக காட்சிப்படுத்துகிறது. இந்நிலையில் கேஎல் ராகுல் காயத்தால் வெளியேறியுள்ளது உண்மையாகவே இந்திய அணிக்கு பின்னடைவு தான் என்று தெரிவிக்கும் நட்சத்திர வீரர் வகாப் ரியாஸ் இப்போட்டியில் விராட் கோலியை விட கேப்டன் ரோகித் சர்மாவை ஆரம்பத்திலேயே அவுட்டாக்கினால் தான் பாகிஸ்தான் வெற்றி காண முடியும் என்று கூறியுள்ளார்.

குறிப்பாக 2019 உலகக்கோப்பையில் ரோஹித் சர்மா சதமடித்து தோற்கடித்ததை மறக்காதீர்கள் என்று பாகிஸ்தானை எச்சரிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “கேஎல் ராகுல் காயத்தை சந்தித்துள்ளது நிச்சயமாக இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். ஏனெனில் மிடில் ஆர்டரில் முக்கிய வீரரான அவருக்கு அழுத்தத்தை எப்படி கையாள்வது என்பது நன்றாக தெரியும். குறிப்பாக 2019 உலகக்கோப்பையில் அவருக்கு எதிராக நான் விளையாடியுள்ளேன்”

- Advertisement -

“அவர் மிகவும் திடமான வீரர். அதை விட ரோகித் சர்மாவை பாகிஸ்தான் ஆரம்பத்திலே அவுட்டாக்குவதற்கான வழியை கண்டறிய வேண்டும். ஏனெனில் அவர் எப்போதுமே பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து பெரிய ரன்களை குவித்து வருகிறார். அதே போல இந்தியாவின் புதிய பவுலிங் அட்டாக்கை பாபர் அசாம் மற்றும் இமாம் ஆகியோர் தகர்க்க வேண்டும்”

இதையும் படிங்க: ஆசியக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சனால் விளையாடவே முடியாது. ஏன் தெரியுமா? – ரூல்ஸ் சொல்வது என்ன?

“இந்த போட்டியில் யார் முதல் 10 ஓவர்களில் நங்கூரமாக விளையாடுகிறார்களோ அவர்களுக்கு அதிக வாய்ப்பு ஏற்படும். ஏனெனில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 2 அணிகளின் பேட்டிங் பெரும்பாலும் டாப் 3 பேட்ஸ்மேன்களை சார்ந்துள்ளது. அதனால் தான் இந்த போட்டியில் புதிய பந்து வெற்றியை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்” என கூறினார்.

Advertisement