ஆசியக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சனால் விளையாடவே முடியாது. ஏன் தெரியுமா? – ரூல்ஸ் சொல்வது என்ன?

Samson
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடுவதற்காக இலங்கை நாட்டிற்கு சென்றடைந்துள்ளது. இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடும் முதல் போட்டியாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி செப்டம்பர் 2-ஆம் தேதி நாளை கண்டி நகரில் நடைபெற இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து நேபாள் அணிக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்காக அறிவிக்கப்பட்ட 17 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்றிருந்த கே.எல் ராகுல் காயம் காரணமாக முதல் இரண்டு போட்டியிலும் விளையாட மாட்டார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

- Advertisement -

இதன் காரணமாக கே.எல் ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் தான் முதல் இரண்டு போட்டிகளுக்குமான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கே.எல் ராகுல் விளையாடவில்லை என்றால் சஞ்சு சாம்சன் தான் அந்த இடத்தில் இறங்க வேண்டும் என்று பலர் கூறி வந்தாலும் விதிமுறைப்படி இந்த ஆசியக்கோப்பை தொடரில் சாம்சன் விளையாட முடியாது என்றே விதிமுறை கூறும் கருத்தாக இருந்து வருகிறது.

- Advertisement -

ஏனெனில் இதுபோன்ற பெரிய தொடர்களில் வீரர்கள் அறிவிக்கப்படும்போது பேக்கப் வீரராக சேர்க்கப்படும் வீரர் முதன்மை அணியில் இருந்து யாரேனும் ஒரு வீரர் நீக்கப்பட்டாலோ அல்லது காயம் காரணமாக வெளியேறினாலோ மட்டுமே அவரால் அதிகாரவபூர்வமாக முதன்மை அணியில் இணைய முடியும்.

இதையும் படிங்க : IND vs PAK : விராட் கோலிக்கு பாகிஸ்தான் நாட்டு ரசிகர் வைத்த கோரிக்கை – வைரலாகும் புகைப்படம்

அப்படி சஞ்சு சாம்சன் இந்த தொடரில் இணைய வேண்டும் என்றால் காயத்தில் இருக்கும் ஏதேனும் ஒரு வீரர் வெளியேற வேண்டும். அல்லது அணியிலிருந்து ஒரு வீரரை நீக்கினால் மட்டுமே அவரை முதன்மை அணியில் இணைக்க முடியும். அப்படி முதன்மை அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டால் மட்டுமே அவரால் இந்த ஆசியக்கோப்பை தொடரில் விளையாட முடியும். இல்லையெனில் பேக்கப் வீரராக இருக்கும் அவர் பெஞ்சில் மாறுவதை தவிர வேறு வழியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement