இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி முல்தான் நகரில் கோலாகலமாக துவங்கியது. இந்த தொடரில் மொத்தம் 13 ஆட்டங்களில் நான்கு ஆட்டங்கள் பாகிஸ்தானிலும், மீதமுள்ள ஒன்பது ஆட்டங்கள் இலங்கை நாட்டிலும் நடைபெறுகின்றன.
இந்நிலையில் இந்த தொடரின் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி செப்டம்பர் இரண்டாம் தேதி நாளை கண்டி நகரில் நடைபெற இருக்கிறது.
உலகின் நம்பர் ஒன் ஒருநாள் கிரிக்கெட் அணியாக பார்க்கப்படும் பாகிஸ்தான் அணி இந்திய அணியை எதிர்த்து விளையாட இருப்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. ஏற்கனவே நேபாள் அணிக்கு நடைபெற்ற போட்டியில் 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியானது அதே உத்வேகத்துடன் இந்திய அணியை வீழ்த்த தயாராகி வருகிறது.
அதேபோன்று பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தங்களது ஆதிக்கத்தை தொடர இந்திய அணியும் முனைப்பு காட்டும் என்பதால் இந்த போட்டியின் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் கிங் கோலி பாகிஸ்தானில் விளையாடுவதை பார்க்க ஆவலாக இருப்பதாக கூறி ஒரு பேனர் ஒன்றினை கையில் ஏந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
Another Virat Kohli fan in Multan. They want to see King Kohli playing in Pakistan 🔥🔥 #AsiaCup2023 #AsiaCup pic.twitter.com/BH3VFWAc3v
— Farid Khan (@_FaridKhan) August 31, 2023
இதுகுறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் குறிப்பிடப்பட்டதாவது : ஆசிய கோப்பை தொடரை காண நாங்கள் ஆவலாக இருக்கிறோம். அதிலும் கோலி பாகிஸ்தான் வந்து விளையாட வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும் அவர் அதில் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இதையும் படிங்க : இனிமே வேர்ல்டுகப் முடியும் வரை அவருக்கு ரெஸ்ட்டே கொடுக்காதீங்க. அவரை தொடர்ந்து ஆடவையுங்க – கம்பீர் கருத்து
இருப்பினும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் சில பிரச்சனைகள் காரணமாக இரு அணிகளும் பொதுவான நாடுகளில் மட்டுமே பங்கேற்று ஐசிசி தொடர், ஆசிய கோப்பை தொடர் போன்ற தொடர்களில் மட்டுமே விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.