இனிமே வேர்ல்டுகப் முடியும் வரை அவருக்கு ரெஸ்ட்டே கொடுக்காதீங்க. அவரை தொடர்ந்து ஆடவையுங்க – கம்பீர் கருத்து

Gautam-Gambhir
- Advertisement -

இந்தியாவில் எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐ.சி.சி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்ற விளையாட இலங்கை சென்றடைந்துள்ளது. இந்த ஆசிய கோப்பை தொடரில் வெற்றி பெற்று அந்த நம்பிக்கையுடன் இந்திய அணி உலக கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில் இன்னும் சில மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரானது நடைபெற உள்ள வேளையில் தற்போது முன்னாள் வீரர்கள் பலரும் இந்த உலகக் கோப்பை குறித்தும், அந்த தொடரில் விளையாடப் போகும் இந்திய அணி குறித்தும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கெளதம் கம்பீர் எதிர்வரும் உலககோப்பை தொடர் வரை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவிற்கு இனி ஓய்வே கொடுக்காமல் தொடர்ச்சியாக அணியில் விளையாட வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : 50 ஓவர் உலகக் கோப்பை தொடரானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறுகிறது. எனவே இந்த தொடரானது பும்ராவிற்கு மிகவும் முக்கியம். தற்போது பும்ரா இருக்கும் உடற்தகுதிக்கு அடுத்த நான்கு ஆண்டுகள் குறித்து எதையும் உறுதியாக கூற முடியாது.

- Advertisement -

எனவே இந்த உலகக் கோப்பை தொடரில் அவரை சரியாக பயன்படுத்த வேண்டும். அதன் காரணமாக எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் அவர் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும். பணிச்சுமை காரணமாக அவருக்கு ஓய்வினை வழங்கக்கூடாது.

இதையும் படிங்க : IND vs PAK : பாகிஸ்தானுக்கு எதிரான மழையால் ரத்தானால் என்ன நடக்கும்? இந்தியாவுக்கு பின்னடைவா – ரூல்ஸ் கூறுவது இதோ

உலகக்கோப்பை தொடருக்குள் அவர் நிறைய போட்டிகளில் விளையாடினால் தான் அதே நம்பிக்கையுடன் உலக கோப்பையிலும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பார் என கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement