ஆசிய கோப்பையிலயே அந்த இந்திய வீரர் மிரட்டுவாருன்னு சொன்னேன்.. பாக் அணி கேக்கல.. அக்ரம் ஆதங்கம்

Wasim Akram 4
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 12வது லீக் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அஹமதாபாத் நகரில் அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 192 ரன்களை மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 86 ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 53* ரன்களும் எடுத்து 117 பந்துகள் மீதம் வைத்து எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் 3 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்த இந்தியா இந்த உலகக் கோப்பையை சொந்த மண்ணில் அட்டகாசமாக துவங்கியுள்ளது. அதை விட உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 8வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்து தங்களுடைய வெற்றி சரித்திரத்தையும் இந்தியா தக்க வைத்துக் கொண்டது.

- Advertisement -

அப்போவே சொன்னேன்:
முன்னதாக இப்போட்டியில் 155/2 என்ற நல்ல நிலையில் இருந்த பாகிஸ்தானை மேற்கொண்டு 80 பந்துகளில் 36 ரன்கள் மட்டும் கொடுத்து சுருட்டிய இந்தியா சார்பில் பும்ரா, சிராஜ், ஜடேஜா, பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை எளிதாக்கினார். அதிலும் குறிப்பாக குல்தீப் யாதவ் ஒரே ஓவரில் சவுத் ஷாக்கில் இப்திகார் அகமத் ஆகிய 2 முக்கிய பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கி 191 ரன்களுக்கு சுருட்டுவதற்கான சாவியை போட்டார் என்றே சொல்லலாம்.

கடந்த 2019 உலகக்கோப்பையில் பாபர் அசாமை மேஜிக் பந்தில் அவுட்டாக்கிய கடந்த மாதம் இலங்கையில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் 5 விக்கெட்டுகளை எடுத்து பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடிக்க முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார். இந்நிலையில் குல்தீப் யாதவ் சுழலை எதிர்கொள்ள ஆசிய கோப்பையிலேயே தடுமாறியதால் உலகக் கோப்பைக்கு முன் தயாராக இருக்குமாறு சொல்லியும் பாகிஸ்தான் அணியினர் தம்முடைய கருத்தை கேட்கவில்லை என்று வாசிம் அக்ரம் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஏ ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆசிய கோப்பையில் இருந்தே பாகிஸ்தானின் மிடில் ஆர்டரை குல்தீப் யாதவ் திணறடிப்பார் என்று நான் சொல்லி வருகிறேன். அவர்கள் என்னுடைய கருத்தை கொஞ்சம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் பேட்டிங் பயிற்சியாளர் அதற்கான திட்டங்களை கொடுத்ததாக தெரியவில்லை. அவர்கள் நாட்டுக்காக விளையாடுகின்றனர்”

இதையும் படிங்க: சுழலால் இங்கிலாந்தை அப்செட் செய்த ஆப்கன்.. வரலாற்றை மாற்றி எழுதி 2 சரித்திர சாதனை வெற்றி

“பாகிஸ்தானுக்கு எதிராக இந்த வருடம் மட்டும் குல்தீப் யாதவ் 7 விக்கெட்டுகளை 8.57 என்ற அபாரமான சராசரியிலும் 3.33 என்ற எக்கனாமியிலும் எடுத்துள்ளார். அந்த வகையில் பந்தை முற்றிலும் பார்க்க தெரியாதவர்களுக்கு எதிராக வீசுவது போல் குல்தீப் செயல்பட்டார். சொல்லப்போனால் குல்தீப் யாதவ் பந்துகளை விடுங்கள். அவருடைய பவுலிங்கை கூட பாகிஸ்தான் அணியினர் படிக்க தடுமாறுகின்றனர்” என்று கூறினார்.

Advertisement