- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கம்பீர் சொல்ற மாதிரி பாபர் அசாம் செல்பிஷ் கேப்டன் தான் – முன்னாள் பாக் ஜாம்பவான் ஆதரவு கருத்து

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2009க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களம்பிறங்கிய பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தனது முதல் 2 போட்டிகளில் பரம எதிரி இந்தியா மற்றும் ஜிம்பாப்வேவிடம் அடுத்தடுத்த அதிர்ச்சி தோல்விகளை சந்தித்தது. அதனால் நெதர்லாந்துக்கு எதிரான 3வது போட்டியில் வென்றும் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்து போய்விட்டது என்றே கூறலாம். இத்தனைக்கும் வேகத்துக்கு கைகொடுக்கும் ஆஸ்திரேலிய மைதானங்களுக்கு கச்சிதமாக பொருந்தும் உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சு கூட்டணியை கொண்டிருந்தும் பேட்டிங்கில் சொதப்பியதால் அந்த அணிக்கு இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த ஒரு வருடமாக நிலவி வரும் மிடில் ஆர்டர் பேட்டிங் பிரச்சனை இந்த உலகக் கோப்பையில் அதிகமாக எதிரொலித்து வருகிறது. அதனால் அதை சரி செய்ய தொடக்க வீரராக களமிறங்கும் கேப்டன் பாபர் அசாம் அணியின் நலன் கருதி தனது இடத்தை இதர வீரர்களுக்கு கொடுத்து விட்டு 3 அல்லது அதற்கு கீழ் வரிசையில் விளையாடுமாறு அந்நாட்டில் வலுவான கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆனால் அதை செய்யாத அவர் ஓப்பனிங் இடத்தில் தான் களமிறங்குவேன் என்று அடப்பிடித்து சுயநலமாக செயல்பட்டு வருவது அந்நாட்டவர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.

- Advertisement -

செல்பிஷ் கேப்டன்:
அதிலும் குறிப்பாக பிஎஸ்எல் கிரிக்கெட் தொடரில் கராச்சி கிங்ஸ் அணியில் பயிற்சியாளராக செயல்பட்ட போது 3வது இடத்தில் களமிறங்குமாறு கேட்டுக் கொண்டும் அதை பாபர் அசாம் ஏற்கவில்லை என்று முன்னாள் ஜாம்பவான் வீரர் வாசிம் அகரம் தெரிவித்தார். அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டிலும் பாகிஸ்தானுக்காக அதே சுயநலத்துடன் அவர் செயல்படுவதாக கடந்த வாரமே வாசிம் அக்ரம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அந்த நிலையில் சிறப்பாக செயல்பட்டாலே விமர்சிக்கக்கூடிய முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் பாபர் அசாமின் இந்த சுயநல போக்கால் அதிருப்தியடைந்து “செல்பிஷ் கேப்டன்” என்று அவரை வெளிப்படையாக விமர்சித்தார். இது பற்றி நெதர்லாந்துக்க எதிராக பாகிஸ்தான் விளையாடிய போட்டியில் வர்ணையாளராக செயல்பட்ட அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

“என்னைப் பொருத்த வரை முதலில் நீங்கள் உங்களை விட உங்களது அணியை பார்க்க வேண்டும். உங்களது திட்டப்படி எதுவும் செல்லவில்லை என்றால் நீங்கள் பக்கார் ஜமானை மேல் பேட்டிங் வரிசையில் அனுப்ப வேண்டும். ஆனால் இதுதான் சுயநலம் என்பது. ஒரு கேப்டனாக சுயநலமாக இருப்பது மிகவும் எளிதானது. ஏனெனில் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் தொடக்க வீரராக களமிறங்கி நிறைய சாதனைகளை படைப்பது எளிதானது. ஆனால் நல்ல தலைவராக இருந்தால் நீங்கள் முதலில் உங்களது அணியை பற்றி சிந்திக்க வேண்டும்” என்று கடுமையாக விமர்சித்தார்.

- Advertisement -

அந்த நிலையில் பிரபல பாகிஸ்தான் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கௌதம் கம்பீர் பாபர் அசாமை செல்ஃபிஷ் கேப்டன் என்று கூறியதை பற்றி முன்னாள் வீரர் வாசிம் அக்ரமிடம் பற்றி தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதில் உண்மை இருப்பதாலும் ஏற்கனவே பாபர் அசாம் சுயநலத்துடன் செயல்படுவதாக தாமே தெரிவித்திருந்த காரணத்தாலும் கம்பீருக்கு எதிர்ப்பும் தெரிவிக்காத வாசிம் அக்ரம் அது அவருடைய சொந்த கருத்து என்று பதிலளித்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“பாபர் அசாம் கேப்டன்ஷிப் பற்றி கௌதம் கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக தன்னுடைய வர்ணனையில் பக்கார் ஜமானை மேல் பேட்டிங் வரிசையில் அனுப்பி பாபர் அசாம் சுயநலமின்றி நடக்க வேண்டுமென அவர் கூறியிருந்தார். இருப்பினும் அது அவருடைய கருத்தாகும். அவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் 2 கோப்பைகளை வென்று வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டார்.

இதையும் படிங்க : இந்த 2 விஷயத்தை தான் நீ கரெக்ட் பண்ணனும். கே.எல் ராகுலுக்கு அட்வைஸ் கொடுத்த கோலி – வைரலாகும் வீடியோ

அவருடைய காலத்தில் அவர் டாப் வீரராக இருந்தார். அதனால் அவர் அவருடைய கருத்தை தெரிவிப்பதற்கு உரிமை கொண்டுள்ளார். அது அவருடைய சொந்த கருத்தாகும்” என்று கூறினார்.

- Advertisement -
Published by