இந்த 2 விஷயத்தை தான் நீ கரெக்ட் பண்ணனும். கே.எல் ராகுலுக்கு அட்வைஸ் கொடுத்த கோலி – வைரலாகும் வீடியோ

KL-Rahul-and-Kohli
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் தற்போது இந்திய அணியானது அரையிறுதி சுற்றினை நோக்கி முன்னேறி வருகிறது. சூப்பர் 12 சுற்றில் இதுவரை இந்திய அணி விளையாடியுள்ள மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றி மற்றும் ஒரு தோல்வி என நான்கு புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கும் வேளையில் அடுத்து வரும் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

அந்த வகையில் இந்திய அணி இன்று அடிலெயிடு கிரிக்கெட் மைதானத்தில் வங்கதேச அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் அசத்தலாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் அதிரடி துவக்க வீரரான கே.எல் ராகுல் மோசமான பேட்டிங் பார்ம் காரணமாக தவித்து வருகிறார். குறிப்பாக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளிலும் சேர்த்து வெறும் 22 ரன்களை மட்டுமே குவித்துள்ள ராகுல்லின் ஆட்டம் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன.

- Advertisement -

ஆனாலும் அவருக்கு இந்திய அணி ஆதரவாக நின்று தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் ராகுலின் இந்த மோசமான ஃபார்மின் காரணமாக அவருக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியே வலை பயிற்சிக்கு நேரடியாக வந்து அவரின் தவறுகளை கண்டறிந்து சில ஆலோசனைகளையும் வலைப்பயிற்சியின்போது வழங்கினார்.

அப்போது இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் பேட்டிங் பேச்சாளர் விக்ரம் ரத்தோர் ஆகியோர் விராட் கோலியின் உடன் இருந்தனர். ஆனாலும் தனிப்பட்ட முறையில் கே.எல் ராகுலின் தவறுகளை சரி பார்த்த விராட் கோலி அவரிடம் இரண்டு குறைகள் இருப்பதாகவும் அந்த குறைகளை நீக்குவதற்கான பயிற்சியையும் விராட் கோலி வழங்கினார்.

- Advertisement -

அதன்படி ராகுல் பேட்டிங் செய்யும்போது நிற்கும் விதம் (Stance) மற்றும் ஆஸ்திரேலியா போன்ற ஆடுகளத்தில் பவுன்ஸ் மற்றும் வேகத்திற்கு எதிராக பந்தை எவ்வாறு பார்த்து எந்த திசைகளில் அடிக்க வேண்டும் என முக்கிய இரண்டு ஆலோசனைகளை ராகுலுக்கு பிரத்யேகமாக வழங்கினார். மேலும் இந்த பயிற்சியின்போது ராகுல் பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் விராட் கோலி அதனை சரி செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : டி20 உல்க கோப்பை வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான டாப் 9 வீரர்களின் பரிதாப பட்டியல்

என்னதான் கேப்டன் பொறுப்பில் இல்லாவிட்டாலும் அந்த பொறுப்புக்குரிய வேலைகளில் ஈடுபட்டு பார்மின்றி தவிக்கும் ஒரு வீரருக்கு உதவும் விராட் கோலி இந்த குணமானது நல்ல வீரர்களுக்கு ஒரு உதாரணம் என்று ரசிகர்கள் இந்த வீடியோவை அதிகளவில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement