டி20 உல்க கோப்பை வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான டாப் 9 வீரர்களின் பரிதாப பட்டியல்

Afridi
- Advertisement -

உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி டி20 உலக கோப்பை வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இது போன்ற டி20 போட்டிகளில் எவ்வளவு தான் திறமையான பவுலர்களாக இருந்தாலும் அதை சமாளிக்கும் பேட்டிங் நுணுக்கங்களை கற்ற பேட்ஸ்மேன்கள் கொஞ்சமும் கருணை காட்டாமல் களமிறங்கியது முதலே அடித்து நொறுக்கி அதிரடியாக ரன்களை குவிக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். அந்த வகையில் குறைந்தது 10 – 20 ரன்களை அதிரடியாக எடுப்பது கூட டி20 கிரிக்கெட்டில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

ஆனால் அவர்களையும் மிஞ்சும் வகையில் தங்களது பந்து வீச்சில் முழு திறமையையும் வெளிப்படுத்தும் பவுலர்கள் அதிரடியாக விளையாட விடாமல் அவுட்டாக்கி தங்களது அணியின் வெற்றிக்காக பாடுபடுவார்கள். அதனால் தாக்குப் பிடிக்க முடியாத பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து செல்வது வழக்கமாகும். ஆனால் அதற்காக ரன் எதுவும் எடுக்காமல் 0 ரன்களில் அவுட்டாவது அதுவும் டி20 கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேனை பொருத்த வரை மிகப் பெரிய அவமானம் என்று வல்லுனர்கள் சொல்வார்கள். அந்த வகையில் டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

9. லுக் ரைட் 4: இங்கிலாந்து வீரரான இவர் கடந்த 2007 – 2012 வரையிலான உலகக் கோப்பைகளில் களமிறங்கிய 20 இன்னிங்ஸில் 4 முறை டக் அவுட்டாகி இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அதே சமயம் 439 ரன்களை குவித்துள்ள அவர் டி20 உலக கோப்பையில் அதிக டக் அவுட்டான இங்கிலாந்து வீரராகவும் சாதனை படைத்துள்ளார்.

8. ஆண்ட்ரே ரசல் 4: களமிறங்கியது முதலே முரட்டு அடி என்ற தத்துவத்தைக் கொண்டிருக்கும் இவர் 2012 – 2021 வரையிலான உலகக் கோப்பைகளில் களமிறங்கிய 18 இன்னிங்ஸில் 4 போட்டிகளில் டக் அவுட்டாகியுள்ளார்.

- Advertisement -

7. சனாத் ஜெயசூர்யா 4: இலங்கையின் அதிரடி தொடக்க வீரரான இவரும் 2007 – 2010 வரை நடைபெற்ற உலகக்கோப்பையில் களமிறங்கிய 18 இன்னிங்ஸில் 4 முறை டக் அவுட்டாகியுள்ளார். அதில் 346 ரன்களை குவித்துள்ள அவர் டி20 உலகக்கோப்பையில் அதிக டக் அவுட்டான இலங்கை வீரராக பெயரை பெற்றுள்ளார்.

6. லெண்டில் சிம்மன்ஸ் 4: வெஸ்ட் இண்டீஸ் 2 உலக கோப்பைகளை வெல்ல முக்கிய பங்காற்றிய இவர் 2009 – 2021 வரை களமிறங்கிய 14 இன்னிங்ஸில் 4 போட்டிகளில் டக் அவுட்டாகியுள்ளார். அதில் 339 ரன்களையும் குவித்துள்ள அவர் டி20 உலக கோப்பையில் அதிக முறை டக் அவுட்டான வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெயரை ரசலுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

- Advertisement -

5. வேன் டெர் மெர்வி 4: தென் ஆப்பிரிக்காவில் பிறந்து நெதர்லாந்துக்காக விளையாடி வரும் இவர் அந்த இரு அணிகளுக்காகவும் 2009 முதல் இதுவரை களமிறங்கிய 12 டி20 உலக கோப்பை இன்னிங்ஸ்களில் 4 முறை டக் அவுட்டாகியுள்ளார்.

4. காலும் மெக்லியோட் 4: 2009 முதல் விளையாடி வரும் இவர் இதுவரை களமிறங்கிய 11 இன்னிங்ஸில் 93 ரன்கள் மட்டுமே குவித்துள்ள நிலையில் அதிக டக் அவுட்டான ஸ்காட்லாந்து வீரர் என்ற பெயரை பெற்றுள்ளார்.

- Advertisement -

3. ஜார்ஜ் டாக்ரெல் 4: 2010 முதல் அயர்லாந்து அணிக்காக விளையாடி வரும் இவர் வெறும் 7 இன்னிங்ஸில் களமிறங்கினாலும் அதில் 4 முறை டக் அவுட்டாகி டி20 உலக கோப்பையில் அதிக முறை டக் அவுட்டான அயர்லாந்து வீரர் என்ற பரிதாப பெயரை பெற்றுள்ளார்.

2. திலகரத்னே தில்ஷான் 5: இலங்கையின் அதிரடி தொடக்க வீரரான இவர் 2007 – 2016 வரையிலான உலகக் கோப்பைகளில் களமிறங்கிய 34 இன்னிங்ஸில் 5 முறை டக் அவுட்டாகி டி20 உலக கோப்பையில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற சாதனையை பகிர்ந்து கொண்டுள்ளார். இருப்பினும் அதற்கு நிகராக அவர் 897 ரன்களையும் குவித்துள்ளார் என்பது பாராட்டத்தக்கது.

இதையும் படிங்க : சாப்பிட முடியாது, தூங்க முடியாது, மனைவியும் போய்ட்டாங்க. போதைப்பழக்கம் குறித்து மனம்திறந்த – வாசிம் அக்ரம்

1. ஷாஹிட் அஃப்ரிடி 5: சர்வதேச கிரிக்கெட்டில் டக் அவுட்டாவதற்கு மிகவும் புகழ்பெற்று ரசிகர்களிடம் கிண்டல்களுக்கு உள்ளான பாகிஸ்தானைச் சேர்ந்த இவர் டி20 உலக கோப்பையிலும் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற உலக சாதனையை பகிர்ந்து கொண்டுள்ளார். அதிலும் 2007 – 2016 வரை 32 இன்னிங்ஸ்களில் களமிறங்கிய அவர் 5 முறை டக் அவுட்டாகி இந்த பரிதாபத்தை படைத்துள்ளார். அதே சமயம் 546 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

Advertisement