இன்னைக்கு ஷமி இந்தளவுக்கு வளர லெஜெண்ட் வாசிம் அக்ரம் தான் காரணம்.. பின்னணியை பகிர்ந்த முன்னாள் இந்திய வீரர்

Wasim Akram Shami
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 7 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று செமி ஃபைனல் சுற்றுக்கு முதல் அணியாகவும் தகுதி பெற்றது. முன்னதாக இத்தொடரில் முதல் 4 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருந்த முகமது ஷமி காயமடைந்த பாண்டியாவுக்கு பதிலாக விளையாடும் வாய்ப்பைப் பெற்ற முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனால் ஐசிசி தொடரில் 20 வருடங்கள் கழித்து நியூசிலாந்தை தோற்கடிக்க இந்தியாவுக்கு உதவிய அவர் நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிராகவும் வெறும் 238 ரன்களை கட்டுப்படுத்தும் போது 4 விக்கெட்டுகள் எடுத்து 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார். அதே வேகத்தில் இலங்கையை 55 ரன்களுக்கு சுருட்டுவதற்கு 5 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய அவர் வெறும் 3 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

வாசிம் அக்ரமின் உதவி:
இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்களை எடுத்த இந்திய வீரராக சாதனை படைத்த அவர் 2023 உலகக்கோப்பையின் சிறந்த பவுலராக செயல்படுவதாக பென் ஸ்டோக்ஸ் போன்ற பலரது பாராட்டுகளை அள்ளி வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தானின் ஜாம்பவான் வாசிம் அக்ரம் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக இருந்த போது ஷமி முழுமையான பவுலராக உருவாவதற்கு உதவியதாக முன்னாள் இந்திய வீரர் கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.

விராட் கோலியின் அண்டர்-19 இந்திய அணி நண்பரான அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “ஷமி எதிர்கொள்வதற்கு ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறார் என்பதை விராட் கோலி என்னிடம் விளக்கினார். குறிப்பாக ஷமி தம்முடைய விரலில் சில மாற்றங்களை செய்து பந்து வீசுவதால் பும்ராவை எளிதாக படித்து விடலாம். ஆனால் ஷமி வீசும் பந்துகளில் எது உள்ளே வரும் எது வெளியே செல்லும் என்பதை கணிக்க முடியவில்லை என விராட் கோலி சொன்னார்”

- Advertisement -

“விராட் சொன்னது உண்மை. ஏனெனில் ஷமி வலைப்பயிற்சியில் அதிரடியான வேகத்தில் வீசுகிறார். முதல் முறையாக அவர் இந்தியாவுக்காக விளையாட அழைக்கப்பட்ட போது ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பயிற்சிகளை எடுத்தார். அங்கே இருந்த சௌரவ் கங்குலி அவரின் திறமையை பார்த்து விட்டு ஒரு ஓவருக்கு 3 பவுன்சர்களை வீசுவதற்கு அனுமதி கொடுங்கள் என்று அங்கிருந்த பயிற்சியையாளர்களை கேட்டுக் கொண்டார்”

இதையும் படிங்க: அதுக்கெல்லாம் அவசியமே இல்ல.. இந்த டீமே போதும்.. டாசுக்கு பிறகு கெத்தாக பேசிய – ரோஹித் சர்மா

“ஷமியுடன் வாசிம் அக்ரம் நிறைய வேலை செய்துள்ளார். குறிப்பாக ஷமி நல்ல மணிக்கட்டு பொசிஷனை கொண்டிருந்தார். ஆனால் அவர் பந்தை சரியாக விடுவிப்பதில் வாசிம் பாய் உதவினார். அந்த காலங்களில் கொல்கத்தா அணிக்காக விளையாடுவதற்கு ஷமிக்கு நிறைய வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் அவர் வாசிம் அக்ரமை சுற்றியிருந்தார். என்னை கேட்டால் வாசிம் அக்ரம் தான் ஷமியை ஒரு நல்ல பவுலராக உருவாக்கினார்” என்று கூறினார்.

Advertisement