அதுக்கெல்லாம் அவசியமே இல்ல.. இந்த டீமே போதும்.. டாசுக்கு பிறகு கெத்தாக பேசிய – ரோஹித் சர்மா

Rohit
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்படும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 37-வது லீக் போட்டியானது கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் சற்றுமுன் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த மாற்றம் இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் அணியில் ஒரு மாற்றத்தையும் செய்யாமல் அதே அணி தான் விளையாடும் என ரோகித் சர்மா அறிவித்தார்.

- Advertisement -

இதன் காரணமாக கடந்த போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக விளையாடிய அதே அணியே இந்த போட்டியிலும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக களமிறங்க இருக்கிறது. இந்நிலையில் டாசுக்கு பிறகு பேசிய ரோஹித் சர்மா இந்திய அணியில் ஏன் மாற்றங்கள் செய்யவில்லை? என்பது குறித்தும் தெளிவான தகவலை பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் ரோகித் சர்மா கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். ஏனெனில் இந்த மைதானம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் அற்புதமான மைதானம். மேலும் இந்த போட்டியில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்து எங்களுக்கு நாங்களே சவாலை எதிர்கொள்ள விரும்புகிறோம். இந்த போட்டி நிச்சயம் ஒரு அற்புதமான போட்டியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

ஏனெனில் இரண்டு அணிகளுமே சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருப்பதினால் நிச்சயம் இந்த போட்டி அற்புதமாக இருக்கும். அதோடு இந்த போட்டியில் வெற்றி பெற்று நாங்கள் இன்னும் மேலே செல்ல விரும்புகிறோம். தனிப்பட்ட வகையில் இந்த மைதானத்தில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும் எனக்கு மட்டும் இல்லாமல் நமது அணிக்கே இந்த மைதானம் ஒரு சிறப்பு வாய்ந்த மைதானமாக இருக்கிறது.

இதையும் படிங்க : 2011 உலகக்கோப்பை ஃபைனலில் எனக்கு முன் தோனி களமிறங்க காரணம் அதுதான்.. யுவராஜ் சிங் பேட்டி

இந்த போட்டிக்கான இந்திய அணியில் மாற்றங்கள் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் தற்போது நாங்கள் விளையாடி வரும் விதம் மிகச் சிறப்பாக இருப்பதனால் இந்திய அணியில் தற்போதைக்கு எந்த ஒரு மாற்றமும் அவசியம் இல்லை என்பதனாலே அதே அணியுடன் விளையாடுவதாக ரோகித் சர்மா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement