பாகிஸ்தானை அவமானப்படுத்தாதீங்க.. இந்தியாவை விமர்சித்த முன்னாள் வீரரை வெளுத்த வாசிம் அக்ரம்

Wasim Akram 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய முதல் 7 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து செமி ஃபைனல் சுற்றுக்கும் முதலாவதாக தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக மும்பையில் நடைபெற்ற போட்டியில் 358 ரன்களை துரத்திய இலங்கையை தெறிக்க விட்ட இந்திய பவுலர்கள் வெறும் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்கள்.

அதிலும் குறிப்பாக புதிய பந்தை அற்புதமாக ஸ்விங் செய்த முகமது ஷமி 5 விக்கெட்டுகளும் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். அப்படி அனல் பறக்க அவர்கள் வீசிய நெருப்பு போன்ற பந்துகளை தொட முடியாமல் திண்டாடிய இலங்கை 2023 ஆசிய கோப்பை ஃபைனலில் 50 ரன்களுக்கு சுருண்டு தோற்றதை போலவே இப்போட்டியிலும் படுதோல்வியை சந்தித்து உலக கோப்பையில் இருந்து லீக் சுற்றுடன் வெளியேறியது.

- Advertisement -

வாசிம் அக்ரம் பதிலடி:
அதனால் இந்திய பவுலிங் அட்டாக் இறக்கமற்றதாகவும் உலகத்தரம் வாய்ந்ததாகவும் மாறியுள்ளதாக சோயப் அக்தர், வாசிம் அக்ரம் போன்ற ஜாம்பவான்கள் பாராட்டியிருந்தனர். ஆனால் இந்தியா வெல்வதற்காக வேண்டுமென்றே ஐசிசி புதிய பந்துகளை கொடுப்பதாலேயே இந்திய பவுலர்கள் இவ்வளவு ஸ்விங்கை பெற்று எளிதாக வெல்வதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஹஸன் ராஜா அப்பட்டமாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் தங்கள் நாட்டில் பிறந்து கிரிக்கெட்டின் அடிப்படை தெரியாமல் பேசி பாகிஸ்தானுக்கு அவமானத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று அவருக்கு ஜாம்பவான் வாசிம் அக்ரம் அதிரடியான பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி ஏ ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அதை நானும் செய்திகளில் படித்தேன். இவர்களுக்கு இருக்கும் அதே விஷயம் எனக்கும் இருக்க வேண்டும். இதை கேட்க வேடிக்கையாக உள்ளது. ஏனென்றால் அவர்கள் மனம் கிரிக்கெட்டில் இல்லை”

- Advertisement -

“நீங்கள் உங்களை அவமானப்படுத்திக் கொள்ள விரும்பினால் இந்த உலகத்திற்கு முன்னால் எங்களையும் அவ்வாறே செய்யாதீர்கள். இது மிகவும் எளிதானது. பொதுவாக ஒவ்வொரு போட்டியிலும் நடுவர்கள் 12 பந்துகள் கொண்ட பெட்டியை வைத்திருப்பார்கள். அதில் முதலில் பந்து வீசும் அணி தங்களுக்கு விருப்பமான 2 பந்தை தேர்வு செய்யும். அதை தொடர்ந்து பந்து வீசும் அணி தங்களுக்கு விருப்பமான 2 பந்துகளை தேர்வு செய்யும்”

இதையும் படிங்க: எல்லாமே மாரியாச்சி. இனிமே அவங்கள பத்தி பேசுங்க. ஆப்கானிஸ்தான் 4 ஆவது வெற்றிக்கு பிறகு பாராட்டிய – இர்பான் பதான்

“அதன் பின் அந்த பெட்டி 4வது நடுவர் இருக்கும் இடத்தில் வைக்கப்படும். எனவே ஏன் நீங்கள் இப்படி எல்லாம் நினைக்க வேண்டும்? கடந்த சில நாட்களாகவே நமது நாட்டை சேர்ந்த பவுலர்கள் இந்தளவுக்கு ஸ்விங்கை கொண்டு வர முடியவில்லை. ஒருவேளை தற்போது இந்திய பவுலர்கள் ஏதேனும் புதிய திறமையை கற்றிருக்கலாம். மற்ற பவுலர்களை காட்டிலும் அவர்கள் புதிய திறமையை கற்றிருப்பதால் இப்படி ஸ்விங் செய்யலாம். இதில் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்று கூறினார்.

Advertisement