எல்லாமே மாரியாச்சி. இனிமே அவங்கள பத்தி பேசுங்க. ஆப்கானிஸ்தான் 4 ஆவது வெற்றிக்கு பிறகு பாராட்டிய – இர்பான் பதான்

Irfan-Pathan-AFG
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. ஏனெனில் வளர்ந்து வரும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் ஆப்கானிஸ்தான் அணி இதற்கு முன்னதாக ஒருநாள் உலக கோப்பை தொடர் போட்டிகளில் கடைசியாக விளையாடிய 17 போட்டிகளில் 16 தோல்விகளை சந்தித்து இருந்தது.

இவ்வேளையில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் போட்டிகளில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர்கள் இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளின் முடிவில் 7 போட்டியில் விளையாடியுள்ள ஆப்கானிஸ்தான அணி நான்கு வெற்றிகளை பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக நடப்பு சாம்பியனான இங்கிலாந்து முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற அணிகளை வீழ்த்தி இம்முறை ஆப்கானிஸ்தான் அணி தங்களது பலத்தை வெளிக்காட்டி உள்ளது. அதோடு நேற்று நவம்பர் 3-ஆம் தேதி லக்னோ நகரில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான அணி இந்த தொடரில் தங்களது நான்காவது வெற்றியை பதிவு செய்தது.

குறிப்பாக நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணியை 179 ரன்களில் சுருட்டிய ஆப்கானிஸ்தான் அணி 180 ரன்கள் இலக்கினை வெறும் 31.3 ஓவர்களில் துரத்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்படி ஆப்கானிஸ்தான் அணி பெற்று வரும் தொடர் வெற்றிகளுக்கு பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் பகிர்ந்துள்ள ஒரு கருத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வெகுவாக பாராட்டி உள்ளார். இது குறித்து அவருக்கு பதிவிட்டுள்ள அந்த கருத்தில் : முன்பெல்லாம் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெறும்போது அந்த அணியின் பந்துவீச்சு பலம் பற்றியே பலரும் பேசுவார்கள்.

இதையும் படிங்க : இந்தியா – தெ.ஆ போட்டி நடைபெறும் ஈடன் கார்ட்ஸ் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

ஆனால் இந்த உலகக் கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் அவர்களது பேட்ஸ்மன்களும் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வெற்றிக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றனர். எனவே ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு இனிமேல் பந்துவீச்சாளர்களை மட்டும் பற்றி மட்டும் பேசாமல் பேட்ஸ்மேன்களையும் அவர்கள் பேச வைத்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் அணியின் தொடர்ச்சியான சிறப்பான செயல்பாட்டிற்கு எனது வாழ்த்துக்கள் என இர்ஃபான் பதான் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள இந்த கருத்தானது தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement