இந்தியா – தெ.ஆ போட்டி நடைபெறும் ஈடன் கார்ட்ஸ் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Kohli-Eden-Gardens
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் தங்களுடைய சொந்த மண்ணில் முதல் 7 போட்டிகளிலும் 7 வெற்றிகள் பெற்று கில்லியாக செயல்பட்டு வரும் இந்தியா முதல் அணியாக செமி ஃபைனலுக்கும் தகுதி பெற்றுள்ளது. இதை தொடர்ந்து இந்தியா தங்களுடைய அடுத்த போட்டியில் வலுவான தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலை கொடுக்கும் அளவுக்கு தென்னாப்பிரிக்கா வலுவாக இருக்கிறது.

குறிப்பாக டீ காக், க்ளாஸென், டுஷன், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர் போன்ற அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கி பெரிய ரன்களை குவிப்பவர்களாக இருக்கின்றனர். அதே போல சம்சி, கேசவ் மகாராஜ், ரபாடா மார்க்கோ யான்சன் போன்ற பவுலர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுக்கும் திறமையை கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் இந்திய அணியில் பாண்டியா விலகியுள்ளது பின்னடைவாக பார்க்கப்பட்டாலும் ரோகித் சர்மா, கில், விராட் கோலி, ராகுல் ஆகியோர் அதை சமாளிக்கும் தரத்தை கொண்டுள்ளனர்.

- Advertisement -

ஈடன் கார்டன்ஸ்:
மேலும் ஷமி, சிராஜ், பும்ரா ஆகியோர் மிரட்டலான ஃபார்மில் இருக்கும் நிலையில் குல்தீப் யாதவ் சுழலில் மாயாஜாலம் செய்து இந்தியாவின் வெற்றிக்கு போராடுவார் என்று நம்பலாம். அதனால் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இப்போட்டி நவம்பர் 5ஆம் தேதி மதியம் 2 மணிக்கு கொல்கத்தாவில் இருக்கும் உலகப்புகழ் பெற்ற ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த 1864ஆம் தோற்றுவிக்கப்பட்ட மிகவும் இந்தியாவின் பழமையான இந்த மைதானம் 66,000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

1. கடந்த 1987 முதல் இதுவரை இங்கு 34 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளது. அதில் 22 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 13 வெற்றிகளையும் 8 தோல்விகளையும் சந்தித்துள்ளது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. குறிப்பாக தென்னாபிரிக்காவுக்கு எதிராக இங்கு விளையாடிய 3 போட்டிகளில் இந்தியா 2 வெற்றிகளையும் 1 தோல்வியும் பதிவு செய்துள்ளது.

- Advertisement -

2. இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் (496) அடித்த வீரராக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் அதிகபட்ச ஸ்கோர் (264) பதிவு செய்த வீரராக ரோகித் சர்மாவும் சாதனை படைத்துள்ளனர். அதே போல அதிக விக்கெட்கள் எடுத்த பவுலராக ஜாம்பவான் அனில் கும்ப்ளே மற்றும் கபில் தேவும் (தலா 14) சிறந்த பவுலிங்கை (6/12) பதிவு செய்தவராக அனில் கும்ப்ளேவும் சாதனை படைத்துள்ளனர். இந்த மைதானத்தில் அதிகபட்ச ஒருநாள் பதிவு செய்துள்ள அணி இந்தியா : 404/5, இலங்கைக்கு எதிராக, 2014

வெதர் ரிப்போர்ட்:
நவம்பர் 5ஆம் தேதி கொல்கத்தா நகரில் 10% மட்டுமே மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய மாநில மையம் தெரிவிப்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:
ஈடன் கார்டன்ஸ் மைதானம் பெரும்பாலும் பேட்டிங்க்கு சாதகமாக இருந்து வருகிறது. இம்முறை கருமண்ணால் பிட்ச் தயாரிக்கப்பட்டிருக்கும் என்பதால் நல்ல வேகம், பவுன்ஸ் இருக்கும். அதை பயன்படுத்தி நிலைத்து நிற்கும் பேட்ஸ்மேன்கள் நன்றாக பெரிய ரன்கள் அடிக்கலாம். அதே சமயம் வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்தில் வழக்கமான பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

இதையும் படிங்க: நாளைய தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

இருப்பினும் நேரம் செல்ல செல்ல பிட்ச் மெதுவாகி ஸ்பின்னர்கள் இங்கே வெற்றியை தீர்மானிக்கும் அளவுக்கு ஆதிக்கத்தை செலுத்தலாம். வரலாற்றில் இங்கு நடைபெற்ற போட்டிகளில் 18 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும் 13 முறை சேசிங் செய்த அணியும் வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் எடுப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement