நாளைய தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

IND-vs-RSA
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் முதன்மை அணியாக பார்க்கப்படும் இந்திய அணியானது இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 7 லீக் போட்டிகளிலும் அசத்தலான ஆட்டத்தை வெற்றி வெளிப்படுத்தி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தினை பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து இந்திய அணியானது தங்களது எட்டாவது லீக் ஆட்டத்தில் நாளை நவம்பர் 5-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணியை சந்திக்க இருக்கிறது.

இந்த போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணி தங்களது வெற்றி நடையை தொடர முனைப்பு காட்டும். அதேபோன்று இந்திய அணியை வீழ்த்தி தங்களது ஏழாவது வெற்றியை பதிவு செய்வதோடு மட்டுமின்றி அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்ய தென்னாப்பிரிக்க அணியும் முனைப்பு காட்டும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் நாளைய இந்த முக்கியமான லீக் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஏற்கனவே ஹார்டிக் பாண்டியா காயம் காரணமாக இந்த உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளதால் இனிவரும் போட்டிகளில் இந்திய அணி அதை எவ்வாறு கையாளப்போகிறது என்பதும் அனைவரது மத்தியிலும் கவனிக்கப்படும் விடயமாக மாறியுள்ளது.

அந்த வகையில் நாளைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை நாங்கள் இங்கே உங்களுக்காக உத்தேசமாக தொகுத்து வழங்கியுள்ளோம். ஏற்கனவே இந்திய அணி தொடர்ச்சியாக 7 போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளதால் இனிவரும் இந்த இரண்டு லீக் போட்டியிலும் இந்திய அணி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது.

- Advertisement -

மேலும் இதே செட்டிலான அணியுடன் அரையிறுதிக்கு இந்திய அணி செல்லும் என்பதால் கட்டாயம் கடந்த போட்டியில் விளையாடிய அதே அணி தான் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராகவும் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லீக் போட்டிகளை தொடர்ந்து நாக் அவுட் போட்டிகள் நடைபெற உள்ளதால் தற்போது வீரர்களுக்கு இடையே நம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக எந்த ஒரு மாற்றமும் இன்றி இந்திய அணி களமிறங்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் நாளைய தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : இந்தியா – தெ.ஆ போட்டியில் வெல்லப்போவது யார்? வரலாற்று புள்ளிவிவரம் சொல்வது என்ன.. விரிவான அலசல்

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) சூரியகுமார் யாதவ், 7) ரவீந்திர ஜடேஜா, 8) முகமது ஷமி, 9) குல்தீப் யாதவ், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) முகமது சிராஜ்.

Advertisement