இந்தியா – தெ.ஆ போட்டியில் வெல்லப்போவது யார்? வரலாற்று புள்ளிவிவரம் சொல்வது என்ன.. விரிவான அலசல்

IND vs RSA Preview
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை தொடரில் நவம்பர் 5ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 37வது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களில் இருக்கும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அதில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியை தவிர்த்து எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் வென்றுள்ள தென்னாப்பிரிக்கா அசால்டாக 300 – 400 ரன்கள் அடித்து எதிரணிகளை தெறிக்க விட்டு வருகிறது.

கேப்டன் பவுமாவை தவிர்த்து குவிண்டன் டீ காக், ஹென்றிக்ஸ், ஐடன் மார்க்ரம், வேன் டெர் டுஷன், ஹென்றிச் க்ளாஸென், டேவிட் மில்லர் போன்ற வீரர்களால் அந்த அணியின் பேட்டிங் துறை வலுவாக இருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும். சொல்லப்போனால் இந்தியாவை விட மார்க்ரம், கிளாஸின், மில்லர் போன்ற அடித்து நொறுக்கும் வீரர்களால் தென்னாப்பிரிக்காவின் மிடில் ஆர்டர் மிகவும் வலுவானதாக இருக்கிறது.

- Advertisement -

வெல்லப் போவது யார்:
அதே போல தப்ரிஸ் சம்சி, கேசவ் மகாராஜ் ஆகியோர் இந்திய மைதானங்களில் அசத்தும் அளவுக்கு தரமான ஸ்பின்னர்களாக இருக்கின்றனர். இவர்களுடன் ரபாடா, லுங்கி நிகிடி, மார்க்கோ யான்சன், ஜெரால்டு கோட்சி, லிசார்ட் வில்லியம்ஸ் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களும் இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுக்கும் உலகத்தரம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர்.

இருப்பினும் தரமான வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இல்லாதது தென்னாப்பிரிக்காவுக்கு பின்னடைவு என்று சொல்ல முடியாது. ஏனெனில் பாண்டியா காயத்தால் விலகியுள்ளதால் இந்திய அணிலும் அதே பின்னடைவை சந்திக்க உள்ளது. ஆனாலும் பேட்டிங் துறையில் கேப்டன் ரோஹித் சர்மா, கில், விராட் கோலி, ராகுல் ஆகியோர் கண்டிப்பாக தென்னாப்பிரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக செயல்படக்கூடிய திறமையையும் தரத்தையும் கொண்டுள்ளார்கள்.

- Advertisement -

அதே சமயம் ரபாடா, யான்சென் போன்ற பவுலர்கள் வீசுவதற்கு தயாராக இருக்கும் ஷார்ட் பிட்ச் பந்துகளை ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக எதிர்கொள்வதும் பாண்டியா இல்லாத நிலைமையில் ஃபினிஷிங் வேலையை சூரியகுமார் பொறுப்புடன் செய்வதும் வெற்றிக்கு அவசியமாகும். மற்றபடி ஷமி, பும்ரா, சிராஜ் ஆகியோர் வேகத்தில் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களை தெறிக்க விடும் அளவுக்கு தற்சமயத்தில் மிரட்டலான ஃபார்மில் இருக்கின்றனர்.

அதே போல மகாராஜ், சம்சி ஆகியோரை விட குல்தீப் யாதவ் தரமான ஸ்பின்னராக இந்தியாவுக்கு வலுசேர்க்கிறார். இந்த சூழ்நிலையில் இல்லாத குறையை ஜடேஜா ஆல் ரவுண்டராக செயல்பட்டு தீர்ப்பது அவசியமாகிறது. மொத்தத்தில் உண்மையாகவே சில அம்சங்களில் தங்களை விட பலத்துடன் இருக்கும் தென்னாப்பிரிக்காவை இப்போட்டியில் இந்தியா சொந்த மண் சாதகத்துடன் இந்தியா போராடி தோற்கடிக்கும் என்று நம்பலாம்.

- Advertisement -

வரலாற்று புள்ளிவிவரம்:
1. ஒருநாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை மோதிய 90 போட்டிகளில் இந்தியா 37 முறை மட்டுமே வென்றுள்ளது. 50 போட்டிகளில் வென்றுள்ள தென்னாப்பிரிக்கா வலுவான அணியாக இருக்கும் நிலையில் 3 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது. அதே போல உலகக் கோப்பையில் மோதிய 5 போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா 3 முறை வென்று வலுவாக இருக்கும் நிலையில் இந்தியா 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. குறிப்பாக 2011 உலகக் கோப்பையில் இந்தியாவை சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா தோற்கடித்தது.

இதையும் படிங்க: இன்னும் ஏலமே ஸ்டார்ட் ஆகல.. அதுக்குள்ளே சூப்பர் ஸ்டார் வீரரை தட்டி தூக்கிய – மும்பை இந்தியன்ஸ்

2. ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிக ரன்கள் (2001) அதிகபட்ச ஸ்கோர் (200*) அதிக சதங்கள் (5) அடித்த இந்திய வீரராக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனை படைத்துள்ளார். அதே போல அதிக விக்கெட்கள் எடுத்த இந்திய பவுலராக ஜாம்பவான் அனில் கும்ப்ளே (46) முதலிடத்தில் இருக்கும் நிலையில் சிறந்த பவுலிங்கை (5/22) பதிவு செய்தவராக யுஸ்வேந்திர சஹால் சாதனை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் : 401 ரன்களாகும்.

Advertisement