இன்னும் ஏலமே ஸ்டார்ட் ஆகல.. அதுக்குள்ளே சூப்பர் ஸ்டார் வீரரை தட்டி தூக்கிய – மும்பை இந்தியன்ஸ்

MI
Advertisement

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்த ஆண்டு 17-வது சீசன் 2024-ல் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக தற்போது அனைத்து அணிகளுமே தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை முடிவு செய்து இம்மாதம் 15-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து எதிர்வரும் டிசம்பர் 18-ஆம் தேதி துபாயில் அடுத்த சீசனுக்கான வீரர்களின் ஏலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான பணிகளையும் தற்போது தீவிரமாக ஐபிஎல் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதுகுறித்த சில முக்கிய செய்திகளும் அவ்வப்போது வெளியாகி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் அடுத்த ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக டிரேடிங் முறையிலும் அணிகளுக்குள் வீரர்களின் மாற்றத்தை நடத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்ட வேளையில் மும்பை இந்தியன்ஸ் அணியானது தற்போது லக்னோ அணியிடமிருந்து வெஸ்ட் இண்டீஸ் வீரரான ரோமாரியோ ஷெப்பர்டை டிரேடிங் முறையில் வாங்கி உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக தேர்வான அவர் ஒரு போட்டியில் மட்டுமே லக்னோ அணியில் இடம் பிடித்து டக் அவுட் ஆனார். அதேபோன்று பந்துவீச்சில் அவர் ஒரு ஓவர் கூட வீசவில்லை. ஐ.பி.எல் தொடரில் அவருக்கு பெரிய அனுபவம் இல்லையென்றாலும் கரீபியன் லீக் தொடரை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் வீரராக பார்க்கப்படும் அவரை சரியாக மும்பை அணி தேர்வு செய்துள்ளது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

- Advertisement -

ஏனெனில் வேகப்பந்து வீச்சாளரான இவர் பின் வரிசையில் களமிறங்கி அதிரடியாக பேட்டிங் செய்யும் திறனையும் உடையவர். எனவே அவரை சேர்த்தது சரியான முடிவு என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து கொள்கின்றனர். மேலும் ஏலத்தில் விடப்பட்டிருந்தால் நிச்சயம் ஓரளவு பெரிய தொகைக்கு சென்று இருக்கக்கூடிய இவரை மும்பை அணி வெறும் 50 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது அவர்களின் புத்திசாலித்தனமான முடிவாகவும் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : நாக் அவுட் முன்பாக இந்தியாவுக்கு விழுந்த இடி.. காயத்தால் பாண்டியா மொத்தமாக விலகல்.. மாற்று வீரர் அறிவிப்பு

ஐபிஎல் வரலாற்றில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் பெற்ற மும்பை அணியானது கடந்த சில ஆண்டுகளாக தடுமாற்றத்தை சந்தித்து வந்தாலும் அடுத்த ஆண்டு நிச்சயம் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று நம்பலாம்.

Advertisement