நாக் அவுட் முன்பாக இந்தியாவுக்கு விழுந்த இடி.. காயத்தால் பாண்டியா மொத்தமாக விலகல்.. மாற்று வீரர் அறிவிப்பு

Advertisement

சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 7 போட்டிகளிலும் தொடர்ச்சியாக 7 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து செமி ஃபைனலுக்கு சுற்றுக்கு முதல் அணியாகவும் தகுதி பெற்று அசத்தியுள்ளது.

மேலும் தற்போதைய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா உட்பட அனைவருமே நல்ல ஃபார்மில் இருப்பதால் நிச்சயம் இம்முறை இந்தியா சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் உறுதியான நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். ஆனால் இந்த சமயத்தில் காயத்தால் நட்சத்திரம் முதன்மை வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 2023 உலகக் கோப்பையிலிருந்து மொத்தமாக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்தியாவுக்கு பின்னடைவு:
கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது காலில் காயத்தை சந்தித்த பாண்டியா அதன் பின் நடைபெற்ற நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாடவில்லை. இருப்பினும் அவருடைய இடத்தில் வாய்ப்பு பெற்ற ஷமி அந்தக் குறையே தெரியாத அளவுக்கு 3 போட்டிகளில் 14 விக்கெட்களை எடுத்து இந்தியா தொடர்ந்து வெற்றி நடை போட உதவினார்.

மறுபுறம் நாக் அவுட் சுற்றுக்கு முன்பாக பாண்டியா குணமடைந்து வருவதற்கான தேவையான ஓய்வுகள் கொடுக்கப்பட்டது. அப்படிப்பட்ட நிலையில் அவர் காயத்தால் இத்தொடரிலிருந்து முழுவதுமாக வெளியேறுகிறார் என்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் ஷமி வெறும் வேகப்பந்து வீச்சாளர் என்ற நிலைமையில் ஹர்திக் பாண்டியா பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் சமநிலையை ஏற்படுத்தும் ஆல் ரவுண்டராக இருக்கிறார்.

- Advertisement -

மேலும் பாண்டியாவுக்கு பதிலாக இந்த உலகக் கோப்பையில் மற்றொரு வேகப்பந்து வீச்சளார் பிரசித் கிருஷ்ணா விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெறும் வேகப்பந்து வீச்சாளரான அவரும் சமீபத்தில் காயத்திலிருந்து குணமடைந்து அயர்லாந்து தொடரில் விளையாடிய போதிலும் கண்டிப்பாக பாண்டியாவுக்கு நிகரான தரத்தை கொண்டிருக்கவில்லை என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: இங்கிலாந்துக்கு டாட்டா காட்டி நெருக்கடியை உண்டாக்கிய ஆப்கானிஸ்தான்.. மற்றுமொரு புதிய வரலாற்றை எழுதி சாதனை

மொத்தத்தில் பாண்டியா விலகியுள்ளது ரசிகர்களின் உலகக் கோப்பை கனவில் மிகப்பெரிய இடி விழுந்தது போன்ற நிலைமையை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். இருப்பினும் பாண்டியா இல்லாமலேயே வலுவான நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளை தோற்கடித்த இந்தியா நாக் அவுட் சுற்றிலும் அசத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதை தொடர்ந்து இந்தியா தங்களுடைய அடுத்த போட்டியில் வலுவான தென்னாப்பிரிக்காவை நவம்பர் 5ஆம் தேதி கொல்கத்தாவில் எதிர்கொள்கிறது குறிப்பிடத்தக்கது.

Advertisement