அவரோட பெயர் பெருசா வெளிய வராது.. அவர் தான் நியூஸிலாந்தை தெறிக்க விட்டாரு.. அக்ரம் பாராட்டு

Wasim Akram 3
- Advertisement -

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற செமி ஃபைனலில் நியூசிலாந்தை தோற்கடித்த இந்தியா ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்டன் ரோகித் சர்மா 47, கில் 80*, விராட் கோலி 117, ஸ்ரேயாஸ் 105, ராகுல் 39* ரன்கள் எடுத்த உதவியுடன் 398 எண்களை இலக்காக நிர்ணயித்தது.

அதை சேசிங் செய்த நியூசிலாந்துக்கு கேப்டன் கேன் வில்லியம்சன் 69, டார்ல் மிட்சேல் 134 ரன்கள் எடுத்துப் போராடியும் இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் 327 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்து வெளியேறியது. அதனால் ஐசிசி நாக் அவுட் போட்டியில் முதல் முறையாக நியூசிலாந்தை தோற்கடித்து மோசமான வரலாற்றை மாற்றிய இந்தியாவின் வெற்றியில் 7 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய ஷமி ஆட்டநாயகன் விருது வென்றார்.

- Advertisement -

வாசிம் அக்ரம்:
இந்நிலையில் இந்த வெற்றியில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் போல சதமடிக்காத காரணத்தால் கேப்டன் ரோஹித் சர்மாவின் பெயர் பெரிய அளவில் பேசப்படாது என்று வாசிம் அக்ரம் பாராட்டியுள்ளார். ஆனால் ஆரம்பத்திலேயே புதிய பந்தை ஸ்விங் செய்து மிரட்டலை கொடுக்கக்கூடிய ட்ரெண்ட் போல்ட் போன்ற பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு ரோகித் சர்மா அடித்த 47 (29) ரன்கள் தான் இந்தியா 398 ரன்கள் அடிப்பதற்கான அடித்தளத்தை கொடுத்ததாக அவர் பாராட்டியுள்ளார்.

இது பற்றி ஏ ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வாசிம் அக்ரம் பேசியது பின்வருமாறு. “இந்தியா ஃபைனலுக்கு செல்வதற்கு தகுதியான அணி. ஏனெனில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் அவர்கள் முழுமையான செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக கேப்டன் அணியை முன்னின்று வழி நடத்தினார். இருப்பினும் நாம் ரோகித் சர்மாவின் பெயரை அதிகமாக கேட்க மாட்டோம்”

- Advertisement -

“ஏனெனில் அவர் சதம் அல்லது இரட்டை சதமடிக்கவில்லை. ஆனால் அவர் கொடுத்த துவக்கம் அபாரமானது. குறிப்பாக 29 பந்துகளில் 47 ரன்கள் அடித்த அவர் முதல் 10 ஓவர்களில் இந்தியா 84 ரன்கள் குவிக்க உதவினார். அந்த அடித்தளமே இந்தியா பெரிய ஸ்கோர் குவிப்பதற்கான நல்ல அடித்தளத்தை கொடுத்தது. மேலும் ரோஹித் விளையாடிய ஷாட்டுகளை பாருங்கள். ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடிய அவர் பவுலர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கினார்”

இதையும் படிங்க: உலக அணிகளுக்கு அவர் கவலையை தராரு.. ஃபைனலுக்கு முன்பாக எதிரணிகளை எச்சரித்த வில்லியம்சன்

“அங்கிருந்து இந்தியா எளிதாக 397 ரன்கள் அடுத்து வெற்றி கண்டது. இந்திய அணியின் தரமான பேட்டிங் நியூஸிலாந்து பவுலிங் அட்டாக்கை பாதசாரிகளை போல் காட்டியது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் மாபெரும் ஃபைனலில் வென்று 2011 போல கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்தியா களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement