உலக அணிகளுக்கு அவர் கவலையை தராரு.. ஃபைனலுக்கு முன்பாக எதிரணிகளை எச்சரித்த வில்லியம்சன்

- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய 9 லீக் போட்டிகளில் வென்று செமி ஃபைனலில் நியூசிலாந்தை தோற்கடித்து ஃபைனலுக்கு முதல் அணியாக சென்றுள்ளது. குறிப்பாக மும்பையில் நடைபெற்ற செமி ஃபைனலில் ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் வரலாற்றிலேயே முதல் முறையாக நியூசிலாந்து 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது.

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோகித் சர்மா 47, கில் 80*, விராட் கோலி 115, ஸ்ரேயாஸ் ஐயர் 105, ராகுல் 39* ரன்கள் எடுத்த உதவியுடன் 398 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை சேசிங் செய்த நியூசிலாந்துக்கு முக்கிய பேட்ஸ்மேன்கள் கைவிட்ட நிலையில் கேப்டன் கேன் வில்லியம்சன் 69, டார்ல் மிட்சேல் 134 ரன்கள் எடுத்தும் 327 ரன்கள் மட்டுமே தோல்வியை சந்தித்து வெளியேறியது.

- Advertisement -

பாராட்டிய வில்லியம்சன்:
அந்தளவுக்கு மிரட்டலாக செயல்பட்ட இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 7 விக்கெட்டுகளை எடுத்து வெற்றி பெற வைத்தார். முன்னதாக இந்த போட்டியில் 117 ரன்கள் அடித்த விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் மற்றும் ஒரு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை உடைத்து புதிய உலக சாதனைகளை படைத்தார்.

இந்நிலையில் 2008 அண்டர்-19 உலகக்கோப்பை முதல் எதிரணியில் விளையாடி வரும் விராட் கோலி தொடர்ந்து முன்னேற்றத்தை சந்தித்து வருவதாக கேன் வில்லியம்சன் பாராட்டியுள்ளார். குறிப்பாக உலக அணிகளுக்கு விராட் கோலி கவலையை கொடுக்கும் வகையில் செயல்படுவதாக தெரிவிக்கும் அவர் ஃபைனலில் இந்தியா வெற்றி பெறுவதை எதிரணிகள் நிறுத்துவது கடினம் என்று கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“பொதுவாக நீங்கள் 50 போட்டிகளில் விளையாடினாலே யாராவது ஒருவர் உங்களை அழைத்து இது சிறப்பான கேரியர் என்று பாராட்டுவார்கள். அந்த சூழ்நிலையில் 50 சதங்கள் அடிப்பது அபாரமானதாகும். சதத்தை மட்டுமல்லாமல் அவர் தன்னுடைய அணிக்காக வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். அந்த வகையில் அவர் சிறந்தவர் இல்லையா? மேலும் அவர் தொடர்ந்து தன்னை மெருகேற்றிக் கொண்டே வருகிறார். அது உலக அணிகளுக்கு கவலையை கொடுக்கும் அம்சமாகும்”

இதையும் படிங்க: இந்தியாவை பத்தி பேசுறத நிறுத்துங்க முட்டாள்களே.. மைக்கேல் வாகன் – ஆஸி ஊடகங்களை கோபத்துடன் விளாசிய கவாஸ்கர்

“எங்களை விட சிறப்பாக விளையாடிய இந்தியா இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள். பும்ரா மற்றும் ஷமி ஆகிய இருவருமே புதிய பந்தில் அசத்தினார்கள். குறிப்பாக பந்தை ஸ்டம்ப்பை நோக்கி கொண்டு வரும் ஷமி குறைந்த போட்டிகளிலேயே அதிக விக்கெட்களை எடுத்துள்ளது அபாரமானதாகும். இந்த தொடர் முழுவதும் இந்தியா சிறந்த கிரிக்கெட்டை விளையாடியுள்ளார்கள். அதனால் தோல்வியை சந்திக்காத அவர்கள் ஃபைனலுக்கு முன்பாக அதிக தன்னம்பிக்கையுடன் செல்வார்கள்” என்று கூறினார்.

Advertisement