இந்தியாவை பத்தி பேசுறத நிறுத்துங்க முட்டாள்களே.. மைக்கேல் வாகன் – ஆஸி ஊடகங்களை கோபத்துடன் விளாசிய கவாஸ்கர்

Sunil Gavaskar 2
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையின் இந்தியா 9 லீக் போட்டிகளில் வென்றதுடன் செமி ஃபைனலிலும் நியூஸிலாந்தை தோற்கடித்தது. அதனால் நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறும் ஃபைனலில் விளையாட முதல் அணியாக தகுதி பெற்றுள்ள இந்தியா 2011 போல கோப்பையை வெல்லாமல் நிற்க மாட்டோம் என்ற வகையில் அசத்தி வருகிறது.

குறிப்பாக மும்பையில் நேற்று நடைபெற்ற செமி ஃபைனலில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோகித் சர்மா 47, கில் 80*, விராட் கோலி 117, ஸ்ரேயாஸ் ஐயர் 105, ராகுல் 39* ரன்கள் எடுத்த உதவியுடன் 398 ரன்கக்கை இலக்காக நிர்ணயித்தது. அதை சேசிங் செய்த நியூசிலாந்து முடிந்தளவுக்கு போராடியும் 327 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்து வெளியேறியது.

- Advertisement -

விளாசிய கவாஸ்கர்:
அந்த அணிக்கு அதிகபட்சமாக டார்ல் மிட்சேல் 134, கேப்டன் கேன் வில்லியம்சன் 69 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 7 விக்கெட்டுகளை சாய்த்தார். முன்னதாக இந்தியா தங்களுடைய பலமான ஸ்பின்னர்களை பயன்படுத்தி வெற்றி காண்பதற்காக வேண்டுமென்றே செமி ஃபைனல் நடைபெற்ற மும்பை வான்கடே பிட்ச்சை சுழலுக்கு சாதகமாக அமைத்துள்ளதாக போட்டி துவங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய ஊடங்கள் விமர்சித்தன.

குறிப்பாக நாக் அவுட் போட்டிகளில் எப்போதும் பயன்படுத்தப்படாத பிட்ச் பயன்படுத்தப்படுவதே வழக்கமான நிலையில் இந்த செமி ஃபைனல் இந்தியா – இலங்கை மோதிய போட்டி நடைபெற்ற பிட்ச்சில் மீண்டும் நடைபெறுவதாக ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் எனும் ஆஸ்திரேலிய ஊடகம் அப்பட்டமாக விமர்சித்தது. அதை பார்த்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் செமி ஃபைனல் நியாயமாக நடக்க இதற்கு முன் பயன்படுத்தப்படாத பிட்ச்சில் விளையாடப்பட வேண்டும் என்று ட்விட்டரில் விமர்சித்தார்.

- Advertisement -

ஆனால் கடைசியில் சுழலுக்கு கொஞ்சம் கூட சாதகம் இல்லாத பிட்ச் இரு அணி பேட்ஸ்மேன்களும் சேர்ந்து 700+ ரன்கள் அடிக்கும் அளவுக்கு பேட்டிங்க்கு சாதகமாக இருந்து அவர்களின் கணிப்புகள் மற்றும் குற்றச்சாட்டுகளை பொய்யாக்கியது. அதனால் கடுப்பான சுனில் கவாஸ்கர் அந்த விமர்சகர்களுக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கொடுத்த பதிலடி பின்வருமாறு.

இதையும் படிங்க: விராட், ஷமி ஹெட்லைன்ஸ்ல இருப்பாங்க.. ஆனா அவர் தான் ரியல் நாயகன்.. நாசர் ஹுசைன் பாராட்டு

“பிட்ச் மாற்றப்பட்டதாக அனைத்து முட்டாள்களும் பேசினார்கள். அதை நிறுத்துங்கள். இந்திய கிரிக்கெட்டை பற்றி பேசுவதை நிறுத்துங்கள். இவை அனைத்தும் முட்டாள்தனமானது. பிட்ச் எப்போதும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. ஒருவேளை அது மாற்றப்பட்டாலும் இரு அணிகளுக்கும் பொதுவாகவே இருக்கிறது. போட்டியின் இடையே மாற்றப்படுவதில்லை. ஒருவேளை நீங்கள் தரமான அணியாக இருந்தால் அதில் விளையாடி வெல்லுங்கள். இந்தியா அதை செய்துள்ளது. எனவே பிட்ச்சை பற்றி பேசுவதை நிறுத்துங்கள். இந்த நிலைமையில் கொல்கத்தா மற்றும் அகமதாபாத் பிட்ச்களும் மாற்றப்படுவதாக பேச்சுக்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் முட்டாள் தனமானதாகும்” என்று கூறினார்.

Advertisement