மேக்ஸ்வெலை கூட அவுட்டாக்கிரலாம்.. ஆனா தரமான அவரை அவுட்டாக்குறது கஷ்டம்.. வாசிம் அக்ரம் பாராட்டு

Wasim Akram 2
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய 9 லீக் போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்றுள்ளது. அதனால் புள்ளி பட்டியலில் முதலிடம் படித்து செமி ஃபைனல் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்தியா நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் நடைபெறும் முதல் போட்டியில் வலுவான நியூசிலாந்தை எதிர்கொள்வது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெற்றிகளில் கேப்டன் ரோஹித் சர்மா முதல் ஷமி வரை அனைத்து வீரர்களும் தங்களுடைய முழு திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட அசத்தி வருகிறார் என்று சொல்லலாம். ஏனெனில் கடந்த வருடம் துவக்க வீரராக ரொம்பவே தடுமாறிய அவர் ரசிகர்களின் கிண்டல்கள் மற்றும் விமர்சனங்களை சந்தித்தார்.

- Advertisement -

வாசிம் அக்ரம் பாராட்டு:
அந்த நிலைமையில் ஐபிஎல் தொடரில் காயத்தை சந்தித்து வெளியேறிய அவர் அதிலிருந்து குணமடைந்து 2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்து ஃபார்முக்கு திரும்பினார். அதே வேகத்தில் இந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே 2/3 என இந்தியா சரிந்த போது 97* ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்த அவர் தம்முடைய சொந்த ஊரான பெங்களூருவில் தீபாவளி தினத்தன்று நடைபெற்ற நெதர்லாந்துக்கு எதிரான போட்டி 102 ரன்கள் விளாசினார்.

குறிப்பாக 62 பந்துகளில் 100 ரன்கள் கடந்த அவர் உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த இந்திய வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தார். அத்துடன் உலகக்கோப்பையில் ராகுல் ட்ராவிட்டுக்கு பின் (1999இல்) 24 வருடங்கள் கழித்து சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக காட்டுத்தனமாக அடித்த கிளன் மேக்ஸ்வெலை கூட ஏதோ ஒரு வகையில் அவுட்டாக்கி விடலாம் ஆனால் க்ளாஸ் மற்றும் தரம் நிறைந்த பேட்ஸ்மேனான ராகுலை அவுட்டாக்குவது மிகவும் கடினம் என்று பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் மனதாரப் பாராட்டியுள்ளார். இது பற்றி ஏ ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒரு பவுலராக மேக்ஸ்வெல் போன்றவரை அவுட்டாக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை அறிவீர்கள்”

இதையும் படிங்க: அப்போ எல்லாம் பொய்யா.. சச்சின், டிராவிட் பெயரை சேத்து வைக்கல.. கதையே வேற.. ரச்சின் அப்பா பேட்டி

“ஆனால் ராகுல் விஷயத்தில் அப்படி கிடையாது. அவர் டெக்னிக்கல் அளவில் நேர்த்தியான பேட்ஸ்மேன். அவர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடியுள்ள அனுபவத்தை கொண்டுள்ளார். தற்போது விக்கெட் கீப்பராக கொடுக்கப்பட்டுள்ள வித்தியாசமான வேலையிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்” என்று கூறினார்.

Advertisement