அப்போ எல்லாம் பொய்யா.. சச்சின், டிராவிட் பெயரை சேத்து வைக்கல.. கதையே வேற.. ரச்சின் அப்பா பேட்டி

Rachin Ravindra 2
Advertisement

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்தைச் சேர்ந்த இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். குறிப்பாக 9 லீக் போட்டிகளின் முடிவில் 565* ரன்கள் எடுத்துள்ள அவர் இந்த உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 வீரர்களில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான்களில் ஒருவராக ஜொலித்து வருகிறார்.

அத்துடன் 23 வயதிலேயே ஒரு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனையும் உடைத்துள்ள அவர் நியூசிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து அனைவரது பாராட்டுகளை பெற்று வருகிறார். சொல்லப்போனால் இந்திய வம்சாவளியை சேர்ந்த அவருடைய குடும்பம் பெங்களூரு நகரிலிருந்து நியூசிலாந்துக்கு சென்றதால் அந்நாட்டிற்கு கிரிக்கெட்டை விளையாட துவங்கிய ரச்சின் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட துவங்கியுள்ளார்.

- Advertisement -

எல்லாம் பொய்யா:
முன்னதாக இந்திய ஜாம்பவான்கள் ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் மிகப்பெரிய ரசிகரான அவரின் தந்தை அதனாலயே அந்த 2 ஜாம்பவான்களின் பெயரை கலந்து ரச்சின் ரவீந்திரா என்று தம்முடைய மகனுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்ததாக செய்திகள் வெளியானது. அதற்கேற்றார் போல் சச்சின், டிராவிட் போலவே ரச்சின் விளையாடுவதால் அது உண்மையாக இருக்கும் என்று ரசிகர்களும் உறுதியாக நம்பி பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அனைவரும் நினைத்துக் கொண்டிருப்பது போல் சச்சின் மற்றும் டிராவிட் ஆகியவருடைய பெயரை கலந்து தம்முடைய மகனுக்கு பெயர் சூட்டவில்லை என்று ரச்சின் ரவீந்திரா தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். குறிப்பாக நாளடைவில் ஊடங்களில் பார்த்து தான் இப்படி ஒரு காரணத்தை அனைவரும் சொன்னதை தாமே அறிந்து கொண்டதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி தி ஃப்ரிண்ட் இணையத்தில் பேசியுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“ரச்சின் பிறந்த போது என்னுடைய மனைவி தான் இந்த பெயரை பரிந்துரைத்தார். அதை பற்றி மேற்கொண்டு விவாதிப்பதற்கு நாங்கள் நிறைய நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. குறிப்பாக அந்தப் பெயர் நன்றாக எளிதாக சிறியதாக இருந்ததால் நாங்கள் அதை வைக்கலாம் என்று முடிவெடுத்தோம். சில வருடங்கள் கழித்து தான் அது ராகுல் மற்றும் சச்சின் ஆகியோரின் பெயரைக் கொண்ட கலவையாக இருப்பதை நாங்களே உணர்ந்தோம்”

இதையும் படிங்க: நெதர்லாந்து அணிக்கெதிராக 9 பவுலர்களை பயன்படுத்த என்ன காரணம்? – ரோஹித் சர்மா கொடுத்த விளக்கம்

“இருப்பினும் ரச்சின் கிரிக்கெட்டராக வரவேண்டும் என்பது போன்ற எண்ணத்துடன் நாங்கள் குழந்தையாக இருக்கும் போது அவருக்கு இந்த பெயரை சூட்டவில்லை” என்று கூறினார். இதை அறியும் ரசிகர்கள் என்னய்யா சொல்றீங்க அப்ப நாங்க கேட்டதெல்லாம் பொய்யா? என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்துகின்றனர். இதை தொடர்ந்து நவம்பர் 15ஆம் தேதி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் செமி ஃபைனலில் மோதுகின்றன.

Advertisement