இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களது பலத்தை வெளிக்காட்டி வருகிறது. குறிப்பாக லீக் சுற்று போட்டிகளின் முடிவில் ஒன்பது போட்டிகளில் விளையாடிய இந்திய அணியானது அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.
அதனை தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிராக எதிர்வரும் அக்டோபர் 15-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் முதல் அரையிறுதி போட்டியில் விளையாட இருக்கிறது. அதற்கடுத்து ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான அரையிறுதி போட்டியும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்த அரையிறுதிக்கு முன்னதாக நடைபெற்று முடிந்த நெதர்லாந்து அணிக்கு கடைசி லீக் போட்டியில் இந்திய அணியில் கே.எல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் தவிர்த்து மற்ற அனைவருமே பந்து வீசியது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில், சூரியகுமார் யாதவ் என அனைவருமே பந்துவீசி இருந்தனர். இப்படி திடீரென இந்திய அணி 9 வீரர்களை பயன்படுத்தி பந்து வீசியது ஏன்? என்ற கேள்வி போட்டிக்கு பின்னர் எழுப்பப்பட்டது. அதற்கு தெளிவான விளக்கம் கொடுத்த கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் :
இந்த போட்டியில் நாங்கள் ஒன்பது வீரர்களை பந்துவீச பயன்படுத்தியுள்ளோம். இது அணிக்கு முக்கியமான மற்றும் தேவையான ஒன்றுதான். ஏனெனில் இது போன்ற போட்டிகளில் தான் சில புது முயற்சிகளை கையில் எடுத்து அதை சோதித்து பார்க்க முடியும். அந்த வகையில் தான் இன்று அந்த சோதனை நாங்கள் நிகழ்த்தினோம். வேகப்பந்து வீச்சாளர்கள் வொயிடு யார்க்கர் பந்துகளை தேவையில்லாத போது பயன்படுத்தக் கூடாது.
இதையும் படிங்க : இந்தியாவுக்கு கண்டிப்பா அந்த பயம் இருக்கும்.. அரையிறுதில இப்படியும் நடக்கலாம் – டெய்லர் எச்சரிக்கை
ஆனால் அதையும் நாங்கள் பயன்படுத்தி பார்த்து எங்களது திறனை சோதித்து உள்ளோம். ஒரு பந்துவீச்சு கூட்டணியாக தற்போது இந்திய அணி மிகச் சிறப்பான நிலையில் உள்ளது. ஆனாலும் புதுப்புது விடயங்களை பரிசோதிப்பதனால் தான் அதிலிருந்து சில விடயங்களை கற்றுக் கொள்ள முடியும் என்றும் அதன் காரணமாகவே இந்த சோதனை இந்த போட்டியில் செய்யப்பட்டதாகவும் ரோஹித் சர்மா விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.