ஃபிட்னெஸ் காணாம போய்டுச்சு.. இந்தியா மாதிரி அதை ஃபாலோ பண்ணுங்க.. பாகிஸ்தானுக்கு அக்ரம் அட்வைஸ்

Wasim Akram 5
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 1992 போல கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் பாகிஸ்தான் பரம எதிரி இந்தியாவுக்கு எதிராக படுதோல்விய சந்தித்தது அந்நாட்டு ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 7 வருடங்கள் கழித்து முதல் முறையாக இந்தியாவில் விளையாடும் அந்த அணி தங்களுடைய முதலிரண்டு போட்டிகளில் நெதர்லாந்து மற்றும் இலங்கையை எளிதாக தோற்கடித்து வென்றது.

ஆனால் அகமதாபாத் நகரில் ஒரு லட்சம் ரசிகர்களுக்கு முன்னிலையில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் பாபர் அசாம் 50, முகமது ரிஸ்மான் 49 ரன்கள் எடுத்ததால் ஒரு கட்டத்தில் 154/2 என்ற நல்ல நிலையில் இருந்தது. ஆனால் அதன் பின் நெருப்பாக பந்து வீசிய இந்திய பவுலர்களுக்கு தாக்குப்பிடிக்காத அந்த அணி சீட்டுக்கட்டு போல சரிந்து அடுத்த 80 பந்துகளில் 36 ரன்கள் மட்டும் எடுத்து 191 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

ஃபிட்னெஸ் இல்ல:
அந்தளவுக்கு அசத்திய இந்தியா சார்பில் சிராஜ், பும்ரா, பாண்டியா, ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். அதைத் துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 86 ரன்களும் ஷ்ரேயஸ் ஐயர் 53* ரன்களும் எடுத்து எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் அதிகபட்சமாக சாகின் அப்ரிடி 2 விக்கெட்டுகள் எடுத்தும் இந்தியாவிடம் உலகக் கோப்பையில் தொடர்ந்து 8வது முறையாக சந்தித்த தோல்வியை பாகிஸ்தானால் தவிர்க்க முடியவில்லை.

இந்நிலையில் சுமாரான பேட்டிங், பவுலிங் ஆகியவற்றை தாண்டி பாகிஸ்தான் அணியினர் சரியான ஃபிட்னஸ் கடைபிடிக்காதது தோல்விக்கு முக்கிய காரணம் என்று முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார். குறிப்பாக இந்திய அணியில் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ள யோயோ டெஸ்ட் பாகிஸ்தான் அணியில் காணாமல் போய்விட்டதாக அதிருப்தியை வெளிப்படுத்தும் அவர் மீண்டும் அந்த சோதனையை பாகிஸ்தான் வாரியம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

- Advertisement -

“தற்போதைய பாகிஸ்தான் வீரர்களின் ஃபிட்னஸ் பற்றி நான் கவலையடைகிறேன். தற்போது பாகிஸ்தான் அணியில் ஃபிட்னெஸ் சோதனையும் செய்யப்படுவதில்லை. குறிப்பாக மிஸ்பா-உல்-ஹக் பயிற்சியாளர் அல்லது தேர்வுக்குழு தலைவராக இருந்த போது யோயோ போன்ற அனைத்து சோதனைகளையும் கட்டாயமாக வைத்திருந்தார். சர்வதேச அளவில் விளையாடும் நீங்கள் மாதத்திற்கு ஒரு முறை ஃபிட்னஸ் பங்கேற்று தேர்ச்சி பெற வேண்டும்”

இதையும் படிங்க: டிஸிப்ளினே இல்ல.. அந்த இந்திய பவுலரை பாத்து கத்துக்கோங்க.. ஷாஹீனுக்கு வக்கார் யூனிஸ் அறிவுரை

“ஒருவேளை நீங்கள் அதை செய்யாவிட்டால் இந்தியாவுக்கு எதிரான இது போன்ற தோல்வி தான் கிடைக்கும். கடந்த 3 வருடங்களில் பாகிஸ்தான் வாரியத்தில் 3 தலைவர்கள் மாறி விட்டனர். அவர்கள் ஃபிட்னெஸ் பற்றி கவலைப்படாமல் பாகிஸ்தான் அணி நிர்வாகம் மற்றும் வீரர்களிடம் அடுத்த தொடரில் விளையாட வேண்டுமா வேண்டாமா என்ற பயத்தையே ஏற்படுத்தியுள்ளார்கள். அப்போட்டியில் 154/2 என்ற நிலையிலிருந்து 191க்கு ஆல் அவுட்டானது பெரிய ஏமாற்றத்தை கொடுக்கிறது” என்று கூறினார்.

Advertisement