டிஸிப்ளினே இல்ல.. அந்த இந்திய பவுலரை பாத்து கத்துக்கோங்க.. ஷாஹீனுக்கு வக்கார் யூனிஸ் அறிவுரை

Waqar Younis
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அகமதாபாத் நகரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து பாகிஸ்தான் சுமாராக விளையாடி வெறும் 192 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

குறிப்பாக பாபர் அசாம் 50, முகமது ரிஸ்வான் 49 ரன்கள் எடுத்ததால் ஒரு கட்டத்தில் 155/2 என்ற நிலையில் இருந்த அந்த அணியை மேற்கொண்டு 36 ரன்கள் மட்டும் கொடுத்து சுருட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக சிராஜ், பாண்டியா, ஜடேஜா, பும்ரா, குல்தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 86 ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 53* ரன்களும் எடுத்து 117 பந்துகள் மீதம் வைத்து எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

ஷாஹீனுக்கு அட்வைஸ்:
முன்னதாக இப்போட்டிக்கு முன்பாக சாதாரண செல்ஃபி கேட்ட இந்திய ரசிகர்களிடம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உங்களை தோற்கடித்த பின் எடுத்துக் கொள்கிறேன் என நட்சத்திர பாகிஸ்தான் பவுலர் ஷாஹீன் அப்ரிடி தெரிவித்திருந்தார். ஆனால் களத்தில் சொன்னது போல் செயல்படாமல் 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்த அவரால் இந்தியாவிடம் தொடர்ந்து உலகக்கோப்பையில் 8வது முறையாக பாகிஸ்தான் சந்தித்த தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

இந்நிலையில் கட்டுக்கோப்புடன் பந்து வீசாத ஷாஹீன் அப்ரிடி விக்கெட்டுகளை எடுக்க அதிகப்படியான முயற்சிகளை எடுப்பதாக ஜாம்பவான் வக்கார் யூனிஸ் விமர்சித்துள்ளார். எனவே தற்போதைய நிலைமையில் சற்று ஃபிட்னஸ் இல்லாமல் தடுமாறும் நீங்கள் இந்தியாவின் பும்ராவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஷாஹீனுக்கு வெளிப்படையாகவே அறிவுரை வழங்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அவருடைய ஃபிட்னெஸில் எதுவும் பிரச்சனை இருக்கிறதா என்பது எனக்கு தெரியாது”

- Advertisement -

“இருப்பினும் அவருடைய பவுலிங்கில் டிசிப்ளின் இல்லை. மேலும் அவர் விக்கெட்டுகளை எடுக்க அதிகப்படியாக முயற்சிக்கிறார். ஷாஹீன் தொடர்ந்து யார்க்கர் பந்துகளை வீச முயற்சிப்பது போல் பொதுவாக நீங்கள் செய்தவற்றை மீண்டும் செய்ய முயற்சிக்கும் போது பேட்ஸ்மேன்கள் அதை அடிக்க தயாராக இருப்பார்கள். மறுபுறம் பும்ரா ஆஃப் ஸ்டம்ப்பின் டாப் லைனில் வீசி தொடர்ந்து அழுத்தத்தை உருவாக்குகிறார்”

இதையும் படிங்க: அஸ்வின் இருந்திருந்தா பாக் 190கூட எடுத்திருக்காது.. அவர் தான் அதிக விக்கெட்ஸ் எடுப்பாரு.. ரசித் லதீப்

“அவர் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி அழுத்தத்தை உருவாக்கி விக்கெட்டுகளை எடுத்தார்” என்று கூறினார். இந்த நிலைமையில் பாகிஸ்தான் தங்களுடைய அடுத்த போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை பெங்களூருவில் எதிர்கொள்ள உள்ளது. அதில் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ள ஆஸ்திரேலியாவை சமாளித்து பாகிஸ்தான் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement