அஸ்வின் இருந்திருந்தா பாக் 190கூட எடுத்திருக்காது.. அவர் தான் அதிக விக்கெட்ஸ் எடுப்பாரு.. ரசித் லதீப்

Rashid Latif
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த முக்கியமான லீக் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா சொந்த மண்ணில் வெற்றி வாகை சூடியது. குறிப்பாக உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 8வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா காலம் காலமாக தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தக்க வைத்துக்கொண்டு அசத்தியது.

அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு முன்னிலையில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் பாபர் அசாம் 50, முகமது ரிஸ்வான் 49 ரன்கள் எடுத்ததால் ஒரு கட்டத்தில் 155/2 என்ற நல்ல நிலையில் இருந்தது. ஆனால் அதன் பின் நெருப்பாக பந்து வீசிய இந்தியா 80 பந்துகளில் 36 ரன்கள் மட்டும் கொடுத்து பாகிஸ்தானை 191 ரன்களுக்கு சுருட்டியது.

- Advertisement -

அஸ்வின் இருந்திருந்தா:
அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக சிராஜ், பும்ரா, குல்தீப் யாதவ், ஜடேஜா, பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 192 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக 86 ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 53* ரன்களும் எடுத்து 117 பந்துகள் மீதம் வைத்து எளிதாக வெற்றி பெற வைத்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்க உதவினர்.

மறுபுறம் ஷாஹீன் அப்ரிடி 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியாத பாகிஸ்தான் அணி தற்போது விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அப்போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இருந்திருந்தால் பாகிஸ்தான் 150 ரன்கள் கூட தாண்டியிருக்காது என முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரசித் லதீப் தங்கள் அணியினரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

மேலும் 2023 ஆசிய கோப்பை முதலே பாகிஸ்தானை திணறடித்து வரும் குல்தீப் யாதவ் இந்த உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை எடுக்கும் பவுலராக இருப்பார் என்று பாராட்டும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “குல்தீப் யாதவுக்கு எதிராக எங்களுடைய பேட்டிங் சுமாராக இருந்தது. அவருடைய 10 ஓவர்களை எப்படியாவது நாங்கள் தடுப்பாட்டத்துடன் விளையாட முயற்சித்திருக்க வேண்டும்”

இதையும் படிங்க: அம்பயரை கண்டபடி திட்டிக்கொண்டே மைதானத்தில் இருந்து வெளியேறிய டேவிட் வார்னர் – நடந்தது என்ன?

“ஆனால் ஒரு பாகிஸ்தான் பேட்ஸ்மேன் கூட அவருடைய பந்தை அடிக்க முடியவில்லை. ஒருவேளை இத்தொடரில் ஓய்வு எதுவும் எடுக்காமல் முழுமையான வாய்ப்புகள் பெற்றால் குல்தீப் இந்த உலகக்கோப்பையின் அதிக விக்கெட்கள் எடுக்கும் பவுலராக வருவார். மேலும் அஸ்வினை அப்போட்டியில் எடுக்காதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் இந்தியாவுக்காக அனைத்து போட்டியிலும் விளையாட வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஒருவேளை அஸ்வின் அப்போட்டியில் விளையாடியிருந்தால் நாங்கள் 190 ரன்கள் கூட அடித்திருக்க முடியாது” என்று கூறினார்.

Advertisement