அம்பயரை கண்டபடி திட்டிக்கொண்டே மைதானத்தில் இருந்து வெளியேறிய டேவிட் வார்னர் – நடந்தது என்ன?

Warner
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று அக்டோபர் 16-ஆம் தேதி நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியும் எந்தவொரு குறைவுமின்றி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 209 ரன்களை மட்டுமே குவித்தது.

- Advertisement -

அதன் பின்னர் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 35.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 215 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வீரரான டேவிட் வார்னர் அம்பயரை திட்டியபடி மைதானத்தில் இருந்து வெளியேறிய விடயம் தற்போது இணையத்தில் அதிகளவு வைரலாகி வருகிறது.

அந்த வகையில் இந்த போட்டியில் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியானது தங்களது முதல் விக்கெட்டை 24 ரன்களிலேயே விட்டுக் கொடுத்தது. அந்த வகையில் நான்காவது ஓவரின் முதல் பந்தை சந்தித்த டேவிட் வார்னர் 11 ரன்கள் எடுத்திருந்த வேளையில் இலங்கை வீரர் மதுஷங்கா பந்தில் எல்.பி. ஆனார். உடனே மைதானத்தில் இருந்த பவுலரும் அதற்கு அப்பீல் செய்ய மைதானத்தில் இருந்த அம்பயரும் அவுட் என்று அறிவித்தார்.

- Advertisement -

ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாத டேவிட் வார்னர் மூன்றாவது அம்பயரிடம் ரிவியூவிற்கு சென்றார். அதில் பந்து லெக் ஸ்டம்பின் மேல் பகுதியில் சற்று விலகியபடி அடித்தது தெரிந்தது. இருப்பினும் அம்பையர்ஸ் கால் முறையில் அவர் ஆட்டமிழந்ததாக மீண்டும் அறிவிக்கப்பட்டது. ஒருவேளை களத்தில் இருந்த அம்பயர் இதனை நாட் அவுட் என்று அறிவித்திருந்தால் நிச்சயம் டேவிட் வார்னர் இந்த விக்கெட்டில் இருந்து தப்பித்திருப்பார் என்பதனால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாத வார்னர் பேட்டால் தனது காலில் அடித்துக் கொண்டது மட்டுமின்றி களத்தில் இருந்த அம்பயர் ஜோயல் வில்சனை கடுமையாக திட்டியபடி மைதானத்திலிருந்து வெளியேறினார்.

இதையும் படிங்க : எனக்கோ தோனிக்கோ இல்ல.. 2011 உ.கோ ஃபைனல் ஆட்டநாயகன் விருதை அவருக்கு கொடுத்திருக்கணும்.. கம்பீர் ஆதங்கம்

தனது விக்கெட் விழுந்த விரக்தியில் அவர் இப்படி செய்து இருந்தாலும் இதுபோன்று அம்பயரை நேருக்கு நேர் திட்டியபடி வெளியேறியதெல்லாம் தவறு என்றும் அம்பயர்களின் முடிவினை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்றும் ரசிகர்கள் அவரது இந்த செயலை விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement