இந்திய அணியின் ஒரே வீக்னெஸ்.. ஸ்ரேயாஸை கழற்றி விட்டு அவர விளையாட வைங்க.. மிஸ்பா, வாசிம் அக்ரம் கருத்து

Wasim Akram and Misbhah Ul Haq
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 6 போட்டிகளிலும் தொடர்ச்சியான வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் அசத்தி வருகிறது. குறிப்பாக வலுவான ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து போன்ற டாப் அணிகளை தோற்கடித்த இந்தியா நடப்பு சாம்பியன் இங்கிலாந்தையும் 100 வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி நடை போடுகிறது.

மேலும் தற்போதைய அணியில் ரோகித் சர்மா முதல் ஷமி வரை பெரும்பாலான வீரர்கள் நல்ல ஃபார்மில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்துவதால் 2011 போல இம்முறை சொந்த மண்ணில் கோப்பையை நிச்சயம் வெல்வோம் என்ற நம்பிக்கை இந்திய ரசிகர்களிடமும் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இந்த அணியில் பேட்டிங் துறையில் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் ஷார்ட் பிட்ச் பந்துகளில் தொடர்ந்து ஃபுல் ஷாட் அடிக்கிறேன் என்ற பெயரில் அவுட்டாகி வருவது ஒரே பின்னடைவாக இருந்து வருகிறது.

- Advertisement -

இந்தியாவின் பலவீனம்:
சொல்லப்போனால் ஆரம்பம் முதலே சுழல் பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் அவர் தரமான ஷார்ட் பிட்ச் பவுன்சர் பந்துகளில் அவுட்டாகும் பலவீனத்தை கொண்டிருந்தும் இன்னும் முன்னேறாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் இருக்கும் ஒரே பலவீனமான ஸ்ரேயாஸ் ஐயரை கழற்றி விட்டு பாண்டியா குணமடைந்ததும் ராகுலை 4வது அதில் விளையாட வையுங்கள் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஏ ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “முதல் நாளிலிருந்தே ராகுல் 5வது இடத்தில் வருவது தாமதம் என்று நான் கருதுகிறேன். கிளாஸ் வீரரான அவர் 4வது இடத்தில் விளையாட வேண்டும். எனவே ஹர்திக் பாண்டியா குணமடைந்து வந்ததும் சூரியகுமார் யாதவ் 6வது இடத்திலும் ஜடேஜா 7வது இடத்திலும் விளையாடலாம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த மாதம் ஸ்ரேயாஸ் சதமடித்தது தரமாக இருந்தது”

- Advertisement -

“ஆனாலும் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அவருடைய சராசரி 19 – 20 என்று குறைவாகவே இருக்கிறது. மேலும் ஷார்ட் பந்துகளை அடிக்க முடியாமல் அவர் தடுமாறும் பலவீனத்தை எதிரணிகள் நன்றாக பயன்படுத்துகின்றன. சொல்லப்போனால் புல் ஷாட் அதற்கு சரியற்ற ஷார்ட் பந்துகளில் கூட அவர் அதை அடிக்க முயற்சிக்கிறார். நீங்கள் அதைப் பற்றி அதிகமாக சிந்தித்தால் அதுவே பிரச்சனையாகி விடும். அவர் ஷார்ட் பந்துகளை அடிப்பதற்கு சரியான இடத்திலும் நிற்பதில்லை. விடுவதற்கும் முயற்சிப்பதில்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க: முன்னாடி எல்லாம் ஒரு விஷயம் தான். ஆனா இப்போ எல்லாம் மாறிடுச்சு – சரித்திரம் படைக்கும் ஆப்கனை பாராட்டும் ரசிகர்கள்

அதே நிகழ்ச்சியில் வாசிம் அக்ரம் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஆம் இஷான் கிசான் இடது கை வீரராக வெளியே உட்கார்ந்து இருக்கிறார். ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலேயே அவர் பாண்டியாவுடன் அமைத்த பார்ட்னர்ஷிப்பை மறக்காதீர்கள். அவரும் மிடில் ஆர்டரில் விளையாடும் தகுதியை கொண்டுள்ளார்” என்று கூறினார்.

Advertisement