முன்னாடி எல்லாம் ஒரு விஷயம் தான். ஆனா இப்போ எல்லாம் மாறிடுச்சு – சரித்திரம் படைக்கும் ஆப்கனை பாராட்டும் ரசிகர்கள்

AFG
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கத்துக்குட்டி அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகின் முன்னணி அணிகளுக்கு எதிராக வெற்றிகளை பெற்று தங்களது சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலக கோப்பை தொடரிலும் அவர்களது ஆட்டம் அற்புதமாக இருந்து வருகிறது.

குறிப்பாக பலம் வாய்ந்த அணிகளாக பார்க்கப்படும் இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் போன்ற அணிகளே இந்த தொடரில் திணறும்போது அவர்கள் இதுவரை விளையாடியுள்ள 6 லீக் போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்று தற்போது புள்ளி பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பிடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளனர்.

- Advertisement -

வழக்கமாகவே ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரை அந்த அணியின் வெற்றி பெறும் போது ரஷித் கான், முஜிபுர் ரஹ்மான், முகமது நபி, நவீன் உல் ஹக், பசல்ஹக் பரூகி போன்ற பந்துவீச்சாளர்கள் தான் சிறப்பாக செயல்பட்டிருப்பார்கள். அப்படி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவதாலேயே வெற்றி கிடைத்து வருகிறது என்று பலரும் பேசி வந்தனர்.

ஆனால் தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் நிலைமை முற்றிலுமாக மாறியுள்ளது ஏனெனில் பவுலர்களுக்கு இணையாக அந்த அணியின் பேட்ஸ்மேன்களும் கலக்கி வருகின்றனர். குறிப்பாக அந்த அணியில் அதிரடி ஆட்டக்காரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜாட்ரான் ஆகியோர் துவக்க வீரர்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து வருகின்றனர்.

- Advertisement -

அதோடு மிடில் ஆர்டரில் ரஹமத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷாஹிதி, ஓமர்சாய், இக்ராம் என அனைத்து பேட்ஸ்மேன்களும் கைகொடுத்து வருகின்றனர். குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் தற்போது இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் ஆப்கானிஸ்தான அணி வெற்றிபெறும் போது அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் பெரிய பங்களிப்பை வழங்கி உள்ளனர். முன்பெல்லாம் 240-250 ரன்கள் அடித்தாலே ஆப்கானிஸ்தான் அணி சேசிங் செய்யாது என்று பேசப்பட்டு வந்த வேளையில் தற்போது அவர்களது பேட்ஸ்மேன்கள் மிகப் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற்று தருவது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

இதையும் படிங்க : 1996 உலக சாம்பியனின் பரிதாப நிலை.. ஜிம்பாப்வேயை முந்தி இலங்கை மோசமான உலக சாதனை

அந்த வகையில் முன்பெல்லாம் ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சில் மட்டுமே பலம் வாய்ந்தது என்று அனைவரும் பேசிவந்த நிலையில் தற்போது அந்த அணியின் பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடி சரித்திரத்தை மாற்றி அமைத்து வருகின்றனர். இந்த உலகக் கோப்பையை பொறுத்தவரை அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திடும் ஆப்கானிஸ்தான் அணியானது நிச்சயம் இனிவரும் காலங்களில் பெரிய அணியாக உருவெடுக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement